பதவியேற்ற 24 மணிநேரத்தில் 110 பேர் என்கவுண்டர்..!!!நிஜமாக ஒரு கதாநாயகன்!! அவர் யார்? - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Saturday 18 August 2018

பதவியேற்ற 24 மணிநேரத்தில் 110 பேர் என்கவுண்டர்..!!!நிஜமாக ஒரு கதாநாயகன்!! அவர் யார்?

 நான் பதவிக்கு வந்தால் – இந்த அயோக்கியர்கள் அத்தனை பேரையும் சுட்டுத் தள்ளுவேன்அவர்களின் பிணத்தை கடலில் தூக்கி எறிவேன்..ஆயிரம் பேராகட்டும், பத்தாயிரம் பேராகட்டும் எனக்குகவலை இல்லை ”அவர்களின் பிணத்தை கடலில் தூக்கி எறிவேன்..ஆயிரம் பேராகட்டும், பத்தாயிரம் பேராகட்டும் எனக்குகவலை இல்லை ”– என்று தேர்தலின் போதே வெளிப்படையாக கூறி,பலமடங்கு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று
அதிபர் பதவிக்கு வந்து –அடுத்த 24 மணி நேரத்தில் 110 போதை மருந்து
விற்பனையாளர்களை சுட்டுத்தள்ளியதன் விளைவு –ஆயிரக்கணக்கான ரவுடிகளும், போதைமருந்துவியாபாரிகளும் – இரண்டு கைகளையும்தூக்கிக்கொண்டு போய் காணும் இடங்களில் எல்லாம்போலீசிடமும், ராணுவத்திடமும் சரணடைகிறார்கள்…!!!– வித்தியாசமான ஒரு தலைவர் – பிலிப்பைன்ஸ்நாட்டின்புதிய ஜனாதிபதியாக ஜூலை 1-ந்தேதி பதவியேற்ற ரோட்ரிகோ டுடேர்தே….!!! ( Rodrigo Duterte )
” பொருளாதாரம் பற்றி எனக்குத் தெரியாது…இந்த நாட்டின் அறிஞர்களும், பொருளாதார நிபுணர்களும்அடங்கிய குழுவிடம் அந்த பொறுப்பை விட்டு விடுவேன்.என் பொறுப்பு – லஞ்சம், கொலை, கொள்ளை, போதைமருந்துவிற்பனை – ஆகியவற்றை அடியோடு ஒழித்துபெண்கள் சுதந்திரமாக நடமாடக்கூடிய ஒரு பத்திரமானநாட்டை உருவாகுவதே.போதை மருந்தை உற்பத்தி செய்பவர்கள்,விற்பனை செய்பவர்கள் –பயன்படுத்துபவர்கள்அத்தனை பேருக்கும் நான் எமனாக இருப்பேன்….சட்டமன்றங்களோ,மனித உரிமை அமைப்புகளோ என்ன சொன்னாலும்அதை நான் பொருட்படுத்தப்போவதில்லை. மக்கள்எனக்கு அளிக்கும் ஆறு ஆண்டுக்கால அவகாசத்தில்முதல் ஆறு மாதத்திலேயே, பிலிப்பைன்ஸ் நாட்டைஉலகிலேயே அமைதியான, பத்திரமான இடமாக்குவதேஎன் லட்சியம்….!!! ”

அவரது இந்த வாக்குறுதிகளை ஏற்றுக் கொண்டு தான்பிலிப்பைன்ஸ் மக்கள் தங்கள் ஜனாதிபதியாகடுடேர்தே-யை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.இந்த டுடேர்தையை அவரது மக்கள் எப்படிபுரிந்து கொண்டார்கள்…?
கேட்கவே வித்தியாசமாக இருக்கும் அவரது பின்னணி –நாம் அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய ஒன்று..71 வயதாகும் டுடெர்தே, பிலிப்பைன்ஸில் –நாட்டுப்புறத்தில், எளிய குடும்பத்தில் பிறந்தவர்.தட்டுத்தடுமாறி, உருண்டு புரண்டு – எப்படியோஒரு வக்கீல் பட்டம் பெறும் அளவிற்கு படித்து விட்டார்.5-6 ஆண்டுகள் வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்தவர்,பின்னர் அரசியலில் நுழைந்தார். தனது ஏரியாவானமின்டனாவோ-வில், Davao என்கிற ஊரின் மேயராகப்பொறுப்பேற்றார். மீண்டும் மீண்டும், மீண்டும் மீண்டும்அந்த ஊர் மக்களால் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டடுடெர்தே, 22 ஆண்டுகளுக்குஅவரது மக்களால் விரும்பிதேர்ந்தெடுக்கப்பட்டு மேயர் பதவியில் இருந்தார்.போதை மருந்து வியாபாரிகளும், சூதாட்ட கிடங்குகளும்,
ரவுடிகளுமாக நிறைந்திருந்த ஊரை சுத்தம் செய்யஆரம்பித்தார். குறி பார்த்து சுடக்கூடிய ஷார்ப் ஷூட்டர்களைதன் காவல் படையில் சேர்த்துக் கொண்டார். பல சமயம்அவரே தனது மோட்டார் பைக்கில், இரவு நேரங்களில்ரோந்து வருவார். கண்ணில் படும் போதை வியாபாரிகள்,ரவுடிகள் அனைவரும் குறி பார்த்து சுடப்பட்டுகொல்லப்பட்டனர். குற்றவாளிகள் நடுத்தெருவில்வேட்டையாடப்பட்டனர். தப்பிக்க முயன்றவர்கள்,
பிடிபட்ட பிறகு நரக வேதனைக்கு உள்ளாயினர்.அவரது பதவிக்காலத்தில் சுமார்1400 பேர் என்கவுண்டர்களில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.விளைவு – ஊர் சுத்தமாகியது. டுடெர்தேயின் புகழ்பிலிப்பைன்ஸ் நாடு முழுவதும் பரவியது…!!!உலகிலேயே பத்திரமான ஊர்களில் 4வது இடமாகமின்டனாவோ-Davao நகரம் பெயர் பெற்றது.சொந்த ஊரில் அவர் நிகழ்த்திய சாதனைகளின்விளைவாக, பிலிப்பைன்ஸ் நாட்டின்மத்திய அரசில் அமைச்சராக சேரும்படிஅவருக்கு பலமுறை அழைப்பு விடுக்கப்பட்டது.குறைந்த பட்சம் 4 வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அத்தகையஅழைப்புகளை நிராகரித்தார் டுடெர்தே.இறுதியில், என்ன தோன்றியதோ தெரியவில்லை –கடந்த ஆண்டு 2015-ல் அடுத்த ஜனாதிபதி தேர்தலில்தான் நிற்கப்போவதாக அறிவித்தார்…அவரது அறிவிப்பை கேட்டதுமே பிலிப்பைன்ஸ் நாடேபரபரப்பினால் பற்றிக் கொண்டது. கருப்பு சந்தைக்காரர்கள்,லஞ்ச ஊழல் சக்கரவர்த்திகள், அரசியல்வாதிகளின்பின்னால் நிற்கும் ஊடகங்கள் – அத்தனையும் அவரின்
நெகடிவ் பக்கத்தை விரிவாக்கி காண்பித்தன –மக்களை பயமுருத்தின…டுடெர்தே சட்டத்தை மதிக்க மாட்டார்…நீதிமன்றங்களை மதிக்க மாட்டார்…
சட்டவிரோதமான கொலைகள் நிகழும் ….மனித உரிமைகள் நசுக்கப்படும் –
என்றெல்லாம் பிரச்சாரம் செய்யப்பட்டது.தன் பங்குக்கு டுதெர்தே – நேரிடையாகவே இதைஉறுதிசெய்வது போல் பேசினார்….ஆறு மாதங்களில்
அத்தனை கொடியவர்களும் சுட்டுக் கொல்லப்படுவார்கள்…அவர்கள் பிணங்கள் சமுத்திரத்தில் விட்டுக் கடாசப்படும்என்றெல்லாம் பேசினார்….
பரபரப்பாக நிகழ்ந்த தேர்தலின் முடிவில் –எதிர் வேட்பாளரான அன்றைய ஜனாதிபதியை விடஇரண்டு மடங்கு ஓட்டு பெற்று வெற்றி பெற்றார்
டுடெர்தே….ஜூலை 1 – பதவி ஏற்றார் –முதல் தகவல் – 110 போதை மருந்து விற்பனையாளர்கள்சுட்டுக் கொல்லப்பட்டனர்.ஆயிரக்கணக்கான போதை மருந்து விற்பனையாளர்களும்,ரவுடிகளும், முன்னாள் குற்றவாளிகளும் –
போலீசில் சரணடந்தனர்….இன்னமும் கணக்கெடுப்பு முடியவில்லை….
கவலைப்படாமல் சுடுங்கள் –நாட்டை சுத்தம் செய்யுங்கள் –உங்கள் செயலின் விளைவுகளுக்குநான் பொறுப்பேற்கிறேன்…என்றுகாவல் படைக்கும், ராணுவத்திற்கும்உறுதி அளித்திருக்கிறார் டுடெர்தே…!வழக்கமாக ஆடம்பரமாக நடைபெறும் ஜனாதிபதியின்பதவியேற்பு விழா – இந்த முறை வித்தியாசமாகவெகு எளிமையாக நடந்தது. வெறும் 600 பேர் மட்டுமே
பங்கேற்ற விருந்தில், மது பரிமாற்றம் கிடையாது.மிகச்சாதாரணமான மெனு.
டுடெர்தே – மிக எளிமையாகவே உடையணிபவர்.பதவியேற்பின் போதும் – ஜனாதிபதிக்கான பாரம்பரியஎம்பிராய்டரி உடை, டை – ஒன்றுமே கிடையாது.
ஜனாதிபதிக்குரிய புல்லெட் ப்ரூப் காரோ, காவலர்களோதனக்கு தேவையில்லை என்று கூறி விட்டாராம்.ஒரு சாதாரண பிக்கப் வேன் தனக்கு போதுமானதுஎன்று கூறி விட்டார்….பிலிப்பைன்ஸ் பொருளாதார ரீதியாக வளர்ச்சிஅடைந்து கொண்டிருந்தாலும் கூட, அந்த வளர்ச்சியின்பலன் ஒரு சில செல்வந்தர் குடும்பங்களையே சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையை நான்அனுமதிக்கப்போவதில்லை. நாட்டின் வளர்ச்சியின் பலன்
அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும்.நாட்டின் செல்வங்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். ஊர்ப்புறங்களில் நிறைய வேலை வாய்ப்புகள்உருவாக்கப்பட வேண்டும் – இதெல்லாம் டுடெர்தே-யின்
கனவுகள்….பிலிப்பைன்ஸின் எதிர்காலம் – நாம் ஆவலுடன் உற்று கவனிக்க வேண்டிய ஒன்றாக இருக்கும்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H