பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.09.18 - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.09.18


திருக்குறள்


வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேற் செல்லு மிடத்து.

விளக்கம்:

தன்னைவிட மெலிந்தவர்களைத் துன்புறுத்த நினைக்கும் போது, தன்னைவிட வலியவர் முன்னால் அஞ்சி நிற்கும் நிலைமை தனக்கு இருப்பதை மறந்துவிடக் கூடாது.

பழமொழி

Charity begins at home

தனக்கு மிஞ்சியது தானமும் தர்மமும்

இரண்டொழுக்க பண்பாடு

1.  நான் எப்பொழுதும் சாலை விதிகளை பின்பற்றி நடப்பேன்.

2.  நான் என்றும் பொதுசொத்துகளை சேதப்படுத்தாமல் பாதுகாப்பேன்.

 பொன்மொழி

வெற்றி பெற மூன்று வழிகள். ஒன்று - மற்றவர்களை விட அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்.
இரண்டு - மற்றவர்களை விட அதிகமாக பணியாற்றுங்கள்.
மூன்று - மற்றவர்களை விட குறைவாக எதிர்பாருங்கள்.

       - வில்லியம்ஸ் சேக்ஸ்பியர்

பொது அறிவு

1.இதயத்தின் இயக்கத்தினை பதிவு செய்ய பயன்படும் கருவி எது?

 கார்டியோகிராப்

2. மருந்துகளின் ராணி என்று அழைக்கப்படுவது எது?

 பெனிசிலின்

English words and Meanings

Deep.         ஆழம்
Desert.       பாலைவனம்
Diversity    வேற்றுமை
Dictionary  மொழி அகராதி
Destroy.      அழித்தல்

 தினம் ஒரு மூலிகையின் மகத்துவம்

*கரிசலாங்கண்ணி*

1. முடி வளர உதவி செய்கிறது.

2.இளநரையை மாற்றக் கூடிய வல்லமைப் பெற்றது.

நீதிக்கதை

ஒரு காட்டில் ஆமையும், நத்தையும் நண்பர்களாய் இருந்தன. அவை இரண்டுக்கும் நீண்டகாலமாக, ஒரு மனக்குறை இருந்தது. தங்களால் வேகமாக நடக்கவோ, தாவிக் குதித்து ஓடவோ முடியவில்லை என்ற மனக்குறைதான் அது.

ஒருநாள், அவை இரண்டும் நடந்து சென்றுகொண்டிருந்த போது, ஓர் அழகிய வெள்ளை நிற முயல் தாவிக் குதித்து, ஓடி வருதைக் கண்டன.

"முயலே நில்!'' என்றது ஆமை.

முயல் நின்றது.

"நீ எப்படி இவ்வளவு வேகமாய் தாவிக் குதித்து ஓடுகிறாய்?'' என்று கேட்டது நத்தை.

"இது என்ன கேள்வி! உங்களுக்கு இருப்பதுபோல், என் முதுகில் கனமான ஓடு இல்லை. அந்தச் சுமை இல்லாததால், வேகமாக ஓடுகிறேன்!'' என்று சொல்லி விட்டு, முயல் அந்த இரண்டையும் இளக்காரமாகப் பார்த்தது.

"ஓஹோ! எங்களின் வேகக் குறைவுக்கு எங்கள் ஓடுதான் காரணமா?''

"ஆமாம்! நீங்கள் உங்கள் ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட்டால், என்னைப் போல் வேகமாக ஓடலாம். வேகமாக ஓடுவதில், ஓர் அலாதியான சுகம் இருக்கிறது தெரியுமா... அனுபவித்துப் பாருங்கள்!'' என்றது முயல்.

ஆமைக்கும், நத்தைக்கும் அந்த இடத்திலேயே தங்கள் முதுகு ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட வேண்டும் என்ற ஆவல் பிறந்தது.

அவற்றைக் கழற்ற முயன்றபோது, திடீரென புதர் மறைவில் ஏதோ அசையும் ஓசை கேட்டது.

ஆமையும், நத்தையும் ஆபத்தை உணர்ந்து, தங்கள் ஓடுகளைக் கழற்றும் முயற்சியைக் கைவிட்டன.

சட்டென, புதர் மறைவிலிருந்து ஓரு ஓநாய் வெளிப்பட்டு, முயலை நோக்கிப் பாய்ந்தது.

ஆமையும், நத்தையும், விருட்டென்று தங்கள் உடலை ஓடுகளுக்குள் இழுத்துக் கொண்டு, உயிர் பிழைத்தன.

ஓநாய் முயலைப் பிடித்தது.

சிறிது நேரம் சென்ற பிறகு ஓடுகளை விட்டு வெளியே வந்த ஆமையும், நத்தையும் முயலின் ரத்தத்தைப் பார்த்து, உறைந்து போயின.

தாங்கள் வேகமாய் ஓடுவதைவிட, உயிர் பிழைத்து வாழ்வதே முக்கியமானது என்பதை உணர்ந்தன. தங்கள் எதிரியிடமிருந்து காப்பாற்றிய தங்கள் ஓடுகளுக்கு அவை நன்றி கூறின.

இன்றைய செய்திகள்

14.09.18

* புகழ்பெற்ற வலி நிவாரணிகள் உள்ளிட்ட ஆபத்து விளைவிக்கக் கூடிய 328 மருந்துகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.

* ரபேல் போர் விமானங்கள் வாங்குவதன் மூலம் நமது பலம் அதிகரிக்கும் என இந்திய விமானப்படை தலைமை தளபதி, ஏர் சீப் மார்ஷல், பி.எஸ்.தனோவா கூறியுள்ளார்.

* வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரிக்க உள்ளதால், மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

* இங்கிலாந்துடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 4-1 என இழந்த போதும் ஐசிசி டெஸ்ட் அணிகள் தரவரிசைப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

* ஓடிசாவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள உள்ள ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி சாம்பியன் போட்டிக்கான தேசிய பயிற்சி முகாமுக்கு 25 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Today's Headlines

🌸The Ministry of Health has banned 328 drugs, including renowned pain killers⭐

🌸Air Chief Marshal, PS Dhanova, Indian Air Force Chief General, said, "Our strength will be increased by purchasing Rafael war planes⭐

🌸The collector has warned the people in the Vaigai river  to be safe due to increasing of the water level⭐

🌸Despite the loss of Test series against England 4-1, India is on the top of the ICC Test rankings list⭐

🌸 25 people have been selected for the National Training Camp for the World Cup Hockey Championship to be held in November in Odissa⭐🙏

Prepared by
Covai women ICT_போதிமரம்

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H