அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவை சந்தித்திருப்பது
நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. அதை
சமாளிக்கும் வழிகள்.
பல்வேறு காரணங்களால், இந்திய ரூபாய் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு எதிராக வீழ்ச்சி அடைந்து வருகிறது. அண்மையில், ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவு, 72.97ஆக ஆனது. ஓராண்டுக்கு முன் டாலருக்கு எதிராக இந்திய ரூபாய், 64.14 ஆக இருந்தது. ஓராண்டில், 13 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. ரூபாய் மதிப்பு பொருளாதார நோக்கிலும், ஏற்றுமதி நோக்கிலும் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. இவை மட்டும் அல்லாமல், சராசரி மக்கள் மீதும், இது பலவிதங்களில் தாக்கம் செலுத்துகிறது.
கல்வி செலவு :பல்வேறு காரணங்களால், இந்திய ரூபாய் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு எதிராக வீழ்ச்சி அடைந்து வருகிறது. அண்மையில், ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவு, 72.97ஆக ஆனது. ஓராண்டுக்கு முன் டாலருக்கு எதிராக இந்திய ரூபாய், 64.14 ஆக இருந்தது. ஓராண்டில், 13 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. ரூபாய் மதிப்பு பொருளாதார நோக்கிலும், ஏற்றுமதி நோக்கிலும் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. இவை மட்டும் அல்லாமல், சராசரி மக்கள் மீதும், இது பலவிதங்களில் தாக்கம் செலுத்துகிறது.
நேரடியாகவும், மறைமுகமாகவும் ரூபாய் மதிப்பு செலுத்தும் தாக்கம் காரணமாக, அன்றாட பட்ஜெட்டிலும் பாதிப்பு ஏற்படலாம். இந்த தாக்கத்தை அறிந்திருப்பதோடு, இவற்றை சமாளிப்பதற்கான வழிகளையும் அறிந்திருக்க வேண்டும். இந்திய மாணவர்களில் பலர், வெளிநாடுகளில் கல்வி கற்கும் ஆர்வம் கொண்டவர்கள். அதிலும் கணிசமான எண்ணிக்கையிலான இந்திய மாணவர்கள், அமெரிக்காவில் கல்வி பயில்கின்றனர். பெரும்பாலான பெற்றோர் வெளிநாட்டு கல்வி செலவை முன்கூட்டியே திட்டமிட்டாலும், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிந்திருப்பது, செலவுகளை கணிசமாக அதிகரிக்கும் என, கருதப்படுகிறது.
ஏற்கனவே அமெரிக்கா சென்று உள்ள மாணவர்கள், செலவு அதிகரிப்பை சமாளிக்க வழி தேடுவதோடு, அங்கு செல்ல திட்டமிட்டுள்ளோர் ரூபாய் மதிப்பு போக்கை மனதில் கொண்டு, அதற்கேற்ப திட்டமிட வேண்டும். சர்வதேச முதலீடுகளில் பரீட்சயம் உள்ளவர்கள், இந்த நிலையை சமாளிக்க, சர்வதேச நிதிகளில் முதலீடு செய்யும் வாய்ப்பையும் பரிசீலிக்கலாம். வெளிநாட்டு கல்வி போலவே, ரூபாயின் மதிப்பு வெளிநாட்டு சுற்றுலா பயணங்களின் செலவையும் அதிகரிக்கச் செய்யும்.
இதன் காரணமாக பலர், தங்கள் பயண திட்டங்களை ரத்து செய்துள்ளனர் அல்லது தள்ளி வைக்க திட்டமிட்டுள்ளனர் என, தெரிய வந்துள்ளது. அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்பவர்களுக்கு அதிகரிக்கும் செலவை சமாளிக்க, ஷாப்பிங், பொழுதுபோக்கு உள்ளிட்டவற்றை, குறைத்துக்கொள்ள நேரிடும். வெளிநாட்டுக்கு செல்ல விரும்புவோர், இந்திய ரூபாய் மதிப்பு அதிகமாக உள்ள நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் வாய்ப்பை பரிசீலிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பணவீக்கம் :
ரூபாய் மதிப்பு பெட்ரோல், டீசல் விலையில் ஏற்கனவே கணிசமாக தாக்கம் செலுத்தியுள்ளது. சொந்தமாக வாகனம் வைத்திருப்பவர்கள், மாதாந்திர பட்ஜெட்டை இது பாதிக்கவே செய்யும். போக்குவரத்து செலவு தவிர்க்க இயலாதது என்பதால், இதை சமாளிக்க வேறு வழிகளில் திட்டமிட வேண்டும். எரிபொருள் விலையேற்றம் விவசாய பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்களின் விலையையும் அதிகரிக்கச்செய்யும் என்பதால், மளிகை சாமான் உள்ளிட்டவற்றின் செலவு அதிகரிக்கும். இதற்கேற்ப திட்டமிடுவது நல்லது.
ரூபாய் மதிப்பு வட்டி விகிதத்தையும் உயரச்செய்துள்ளது. கடனுக்கான வட்டி விகிதம் உயரும் சூழலில், மாதத்தவணையும் உயரும். வட்டி விகிதம் மேலும் உயர வாய்ப்புள்ள சூழலில், பத்திரங்களுக்கான பலன் குறைந்து, கடன்சார் நிதிகள் அளிக்கும் பலனும் குறையலாம். எனவே, முதலீடு நோக்கில் தேவையான மாற்றங்களை மேற்கொள்வது அவசியம். நீண்ட கால நோக்கில், சமபங்கு முதலீடு மற்றும் நாணய நோக்கில் தங்கத்தில் முதலீடும் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், மற்ற அடிப்படை அம்சங்களையும் கவனிக்க வேண்டும்.