*நாடு முழுவதும், அரசு துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும்
ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் நிர்வாக செயல்பாடுகளுக்காக,
ஆதார் எண் சேகரிக்கப் பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ -
மாணவி யரிடமும் ஆதார் எண் சேகரிக்கப்பட்டு, கல்வி நிறுவன தகவல் தொகுப் பில்
இணைக்கப்பட்டுள்ளது.
*மேலும், ஆதார் எண்ணை பயன்படுத்தி, சான்றிதழ்களை சரி பார்க்கவும்,
சான்றிதழ்களை வழங் கவும், ஏற்கனவே கல்வி நிறுவனங்கள் அறிவுறுத்தப் பட்டு
இருந்தன. இந்நிலையில், ஆதார் எண்ணை, சான்றிதழ்களில் பதிவு செய்ய, மத்திய
அரசு திடீர் தடை விதித்துள்ளது.
*இதுகுறித்து, பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி.,யின் செயலர், ரஜினிஷ்
ஜெயின், அனைத்து பல் கலைகளுக்கும், அனுப்பி உள்ள சுற்றறிக்கை: மத்திய
அரசின், மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் சார்பில், 2017
மார்ச்சில், கல்வி நிறுவனங் களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
*இதில், மாணவ - மாணவி யரின் ஆதார் எண்ணை பயன்படுத்துவது தொடர்பான,
வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டிருந்தன.இந்நிலையில், ஆதார் எண்ணை வெளிப்படையாக
தெரிவித்தால், அதன் வழியே, தனிநபர் ரகசியங்கள் வெளியாக வாய்ப்புகள் உள்ளன.
*எனவே, பல்கலைகளும், கல்லுாரிகளும், தங்கள் மாணவர்களின் சான்றிதழ்களில், ஆதார் எண்ணை, எந்த காரணம் கொண்டும் பதிவிட வேண்டாம்.
*மேலும், ஆதார் எண்ணை, வேறு பயன்பாடுகளுக்கு பகிர்ந்து கொள்ளவும்
வேண்டாம்.இந்த உத்தரவை பல்கலைகளும், கல்லுாரிகளும் உடனடியாக பின்பற்றி,
தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது







