
பல்லடத்தில் உள்ள பொன்னி
ஆஸ்பத்திரி தனது மருத்துவ சேவையை மேலும் பல சிறப்பு வசதிகளுடன்
விரிவாக்கம் செய்து புதிய கட்டிடத்தை 100 படுக்கைகளுடன் நவீன வசதிகளுடன்
அமைத்துள்ளது.
இதன் திறப்புவிழா நடைபெற்றது
பொன்னி ஆஸ்பத்திரி டாக்டர் கே.சிவக் குமார் அனைவரையும் வரவேற்றார். புதிய
கட்டி டத்தை நடிகர் சிவகுமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர்
அவர் பேசியதாவது,-
பல்லடம் நகரில் பெரிய
ஆஸ்பத்திரியை பொன்னி ஆஸ்பத்திரி நிர்வாகம் உருவாக்கி உள்ளது.உங்கள்
ஆரோக்கியம் உங்களிடம் தான் உள்ளது நமது முன் னோர்கள் பழைய சோறு
சாப்பிட்டனர். நாம் காபி, டீ குடிக்கிறோம். யார் கற்றுத்தந்தது இந்த
பழக்கம். காலையில் பழைய சோறுடன் மோர் கலக்கி 5 வெங்காயம் சேர்த்து
சாப்பிட்டால் குடல் நோய் நீங்கும். காபி, டீ குடித்தால் பின்னாளில் வயிறு
கெட்டுப்போகும். சாப்பிடும்போது தரையில் அமர்ந்து சம்மனம் போட்டு சாப்பிட
வேண்டும்,

குனிந்து கோலமிட வேண்டும், மாவு ஆட்ட வேண்டும், இவையெல்லாம் அடிப்படையான நமது வழக்கங்கள். இவைகளை மறந்துபோனதால் உடல் நலம் கெட்டது.
இவ்வாறு நடிகர் சிவகுமார் பேசினார்.