
ஃபோர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள உலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் மேஜிக்
நிபுணர்களின் பட்டியலில் உலக மாயாஜால நிபுணர் காப்பர்ஃபீல்ட் முதலிடம்
பிடித்துள்ளார்.
உலகின் டாப் 10 மேஜிக் நிபுணர்கள் மற்றும் மேஜிக் பணக்காரர்கள் பட்டியலை
ஃபோர்ப்ஸ் நாளிதழ் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. இந்தப் பட்டியலில்
அமெரிக்க மேஜிக் நிபுணர் டேவிட் காப்பர்ஃபீல்ட் முதலிடத்தைப்
பிடித்திருக்கிறார். அமெரிக்க மேஜிக் நிபுணர் டேவிட் காப்பர்ஃபீல்ட் தந்திர
வித்தைகள் செய்வதில் வல்லவர். காப்பர்ஃபீல்டின் Lucky #13 என்ற மாயாஜால
நிகழ்ச்சி உலக அளவில் மிகவும் பிரபலமானது. சிறு வயதிலிருந்தே மேஜிகில்
புகழ்பெற்று விளங்கும் காப்பர்ஃபீல்டு, உலக அளவில் உள்ள மாயாஜால
நிபுணர்களிலே மிகப்பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி டேவிட் காப்பர்ஃபீல்டின் சொத்துகள் இந்திய மதிப்பில்
சுமார் 6 ஆயிரத்து 368 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 670 மேஜிக்
நிகழ்ச்சிகள் நடத்தி 6 கோடியே 10 லட்ச ரூபாய் அவர் சம்பாதித்துள்ளார். 200
கோடி சொத்து மதிப்பை பெற்று பென் மற்றும் டெல்லர் இரண்டாவது இடத்தில்
உள்ளனர்.