
கூகுள் டியோ செயலி (Google Duo) உபயோகப்படுத்தினால்
ரூ.9 ஆயிரம் வரை ரொக்கப்பரிசு பெறலாம் என்று கூகுள் நிறுவனம் அறிவித்து
உள்ளது. கூகுள் டியோவை பிரபலப்படுத்தும் நோக்கில் இந்த அறிவிப்பு
வெளியிடப்பட்டு உள்ளது
கூகுள் நிறுவனம் தனது புதிய வீடியோ அரட்டை செயலியை (Video Chat App) கடந்த
ஆகஸ்டு மாதம் அறிமுகப்படுத்தியது. இந்த செயலியானது ஆண்ட்ராய்டு போன்கள்
மற்றும் ஐபோன்களில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்த செயலியை பதிவு செய்யும் போது, பயன்பாட்டில் இருக்கும் சிம் மற்றும்
தொலைப்பேசி எண்ணை சரிபார்த்து உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு
உள்ளது. மேலும், தொலைபேசி எண்ணுடன் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் பெறும்
வகையிலும் இந்த செயலி உருவாக்கப்பட்டு உள்ளது.
கூகுள் டியோவில் உள்ள ஒரு சிறந்த அம்சம் "நாக் நாக்". இது அண்ட்ராய்டு
போன்களுக்கு மட்டும் உள்ளதாகும். அண்ட்ராய்டு போனில் அழைப்பு பெறும் போது,
அழைப்பை எடுக்கும் முன்னே மோபைல் திரையில் அழைப்பாளரிடம் இருந்து நேரடி
வீடியோ காண்பிக்கப்படுகிறது.
இந்த செயலி வேகமாகவும், பயன்படுத்துவதற்கு எளிதானதாகவும் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த வீடியோ செயலியை பிரபலப்படுத்தும் நோக்கில் ரோக்கப்பரிசு அறிவிப்பை கூகுள் வெளியிட்டுள்ளது,.
அதில், இந்தியாவில் அதன் வீடியோ அழைப்புப் பயன்பாட்டைப் பயன்படுத்தும்
நபர்களுக்கு கூகுள் பே பேமென்ட் மூலம் மொத்தமாக 9,000 ரூபாய் வரை
வருடத்திற்கு சம்பாதிக்கலாம் என்று கூறி உள்ளது. இநத செயலி மூலம் புதிய
பயனாளர்களுக்கு அழைப்பு விடுப்பதன் மூலம் இது உங்களுக்கும், தொடர்பை
ஏற்படுத்துபவர்களும் பணப் பரிசு கிடைக்கும் என்று கூறி உள்ளது.
எனினும், நீங்கள் புதிய பயனரிடம் நீங்கள் அழைப்பு அனுப்புகிறீர்கள் என்பதை
உறுதி செய்ய வேண்டும். அழைப்பிதழில் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், பயனாளர்
பதிவுசெய்யப்படாத டியோ கணக்கை சலுகைக் காலத்தின்போது செயல்படுத்தும்போது
இந்த பரிசுத்தொகை கிடைக்கும் என்றும், , அழைக்கப்பட்ட பயனருக்கு 1,000
ரூபாய் மதிப்புள்ள ஸ்கிராட்ச் கார்டு பரிசு கிடைக்கும் என்றும்
தெரிவித்துள்ளது.
டியோவுடன் பதிவு செய்யாத ஒரு தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அழைக்கப்பட்ட
பயனாளர் உள்பட இருவரும் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், இதன் காரணமாக
ஒரு பயனாளர் அதிக பட்சமாக 30 தடவை வெகுமதிகளை சம்பாதிக்கலாம் என்றும்
தெரிவித்து உள்ளது.'