புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு 6 மாதங்களில் 3 சென்ட் இலவச வீட்டு மனைகளை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் ஆணையில், நீர்நிலை, மேய்க்கால்
மற்றும் சாலைகள் போன்ற ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலம்
ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை அப்புறப்படுத்த குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த மக்களுக்கு மாற்று இடம் தேர்வு செய்து பயனாளிகளின் தகுதியின்
அடிப்படையில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கலாம் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்களை அப்புறப்படுத்தி
வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று
தெரிவித்திருக்கும் தமிழக அரசு, மேய்க்கால் மற்றும் சாலை போன்ற மற்ற
ஆட்சேபனையுள்ள புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு குடிசை மாற்று
வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியமர்த்தவும்
ஆணையிட்டுள்ளது. இந்த திட்டம் 6 மாதத்திற்குள் அமல்படுத்தப்படும் என்றும்
தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...