கடந்த திங்கட்கிழமை மாலை, டாக்டர்.சுதாசேசையன்,TTD தொலைக்காட்சியின் SVBC2 ஆன்மிக நிகழ்ச்சியில்,இது தொடர்பாகப் பேசும்போது,
தவறான வழியில் தந்திரமாக ஏமாற்றி காக்கையிடமிருந்து வடையை கவர்ந்தது நரி,என அனைவரும் சொல்லி வருகின்றனர்.
ஆனால்,காக்கை பாட்டியிடமிருந்து திருடிய வடை,அது.அதானால்தான்,அடுத்த நொடியே நரி தந்திரமாகப் பறிகொடுக்க நேர்ந்தது.
இதிலிருந்து, களவாடப்பட்டப் பொருள் நிலைக்காது என்ற உண்மையை,நாம் உணர வேண்டும்,
என்றார்.
காக்கை வடையைத் திருடியது என்பது,தவறானப் பார்வை.மரபுப்படி, நம் பெண்கள் மட்டுமல்ல, உணவகங்களில் எந்த உணவு சமைத்தாலும், முதலில் சாமிக்குப் படைத்துவிட்டு, பின்னர் காக்கைக் கொடுப்பர்.அதன் பின்னர்தான் விற்பனை செய்வர்.
அந்தவகையில் பாட்டி, விற்பனைக்காகத்தான் சுட்ட வடைகளை அடுக்கினார். அதன் பின்னர், ஒருவடையை எடுத்து, பாட்டி சாமி கும்பிட்டு படையல் செய்து, அதனை காக்கை உண்ண வேண்டுமென மனமுவந்து, காக்கைக்குக் கொடுத்தார்.
பின்னர்,காக்கை அந்த வடையைக்
கவ்விச்சென்று மற்ற காகங்களுக்கும் கொடுத்து உண்ணக் காத்திருந்தது.
ஏனெனில், "காக்கை கரவாக் கரந்து உண்ணும்" இயல்பு படைத்தது.
காக்கையின் நற்பண்பே கரவாது உண்ணும் பண்புதான்.
அதனால்தான் "காக்கை கரைந்துண்ணும்" என்றனர்.
அதைக் கருத்தினிலேந்திதான், பாரதியும்
"காக்கை குருவி எங்கள் சாதி" என்றார்.
அதைவிடுத்து, இன்னும் வழிவழியாக வடையை காக்கைத் திருடிச் சென்றது என்று சொல்வது பிழையானது.
அவ்வாறு திருடுவது என்றால் ஒன்றுக்கும் மேற்பட்ட வடைகளை கொத்தி சென்றிருக்கும்.
இங்கு,நரி தன் பிறவிக் குணத்திலிருந்து சற்றும் மாறுபடாது, காக்கையிடம் ஆசை வார்த்தைகள் கூறி,தந்திரமாக ஏமாற்றியுள்ளது.
அதில் மயங்கியக் காக்கை, மதி இழந்து, ஏமாந்து, தனக்கு பாட்டி அன்பாகக் கொடுத்த வடையை, நரியிடம் பறிக்கொடுத்து ஏமாந்துள்ளது.
ஆகையால், இக்கதையின் மூலம்,நயவஞ்ச நரி குணம் படைத்த நண்பர்களைத் தவிர்த்து,கள்ளம் கபடமற்ற, காக்கைப் போன்ற நட்புகளே உயர்ந்தது,என்பதை நாம் உணர்வோம் உயர்வோம்.
குறிப்பு:
டாக்டர்.சுதாசேசையன் சிறந்த மருத்துவர்.
இவரை,மருத்துவ உலகின் "தாரகை" என்றும் கூறுவர்.
ஆன்மிகத்தில்,
ஆழங்கால் பதித்தவர். தமிழிசையில் தடம் பதித்துள்ள முத்துத்தாண்டவர்,மாரிமுத்தாப்பிள்ளை,
அருணாச்சலக்கவிராயர் ஆகியோரைப் பற்றி"சீர்காழி மூவர்" என்னும் நூல் ஒன்றும் எழுதியுள்ளார்.
***************************
ப.தியாகராசன்
விடையல் கருப்பூர்
வலங்கைமான் வட்டம்.