அடுத்த தலைமுறைக்கான வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யும் முறைக்கான மென்பொருளை உருவாக்கும் திட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.ரூ.4,241.97 கோடி மதிப்பில் உருவாகும் இந்தத் திட்டத்துக்கு ஒருங்கிணைக்கப்பட்ட இ-பைலிங், சென்ட்ரலைஸ்ட் பிராஸஸிங் சென்டர் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி தற்போது வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்த பின், அதைப் பரிசீலனை செய்து மீண்டும் அவர்களுக்குப் பணத்தை அளிக்கச் சராசரியாக 63 நாட்கள் ஆகும். இந்நிலையில் இந்த புதிய மென்பொருள் மூலம் அந்தப் பணி ஒருநாளில் முடிந்துவிடும். இந்தப் புதிய மென்பொருள் தயாரிக்கும் வேலை இன்போசிஸ் நிறுவனத்திடம் வழங்கப்பட உள்ளது.