ஜாக்டோ-ஜியோவின் வேலைநிறுத்த போராட்டத்தில் அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில மையம் எடுத்த முடிவிற்கு ஒத்துழைப்பினை நல்கும் விதமாக கடந்த எட்டு நாட்களாக வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம், சிறை நிரப்பும் போராட்டம் ஆகியவற்றில் கலந்துகொண்ட அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பைச் சார்ந்த ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் வீரம் செறிந்த வாழ்த்துக்களையும், நன்றியையும் விழுப்புரம் மாவட்ட அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில் தெரிவித்து கொள்கிறோம்.
மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டமைப்பின் இணைப் பொதுச்செயலாளர் திரு.ந.செல்வராஜ் அவர்கள் உட்பட சுமார் 25-க்கும் மேற்பட்டோர் சிறைச்சென்ற / தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தியாகிகள் அனைவருக்கும் கூட்டமைப்பின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்...










