அரசு ஊழியர், ஆசிரியர்கள் போராட்டத்தை பேச்சுவார்த்தை மூலம் சுமுகத் தீர்வு
காண தமிழக அரசு முன்வரவேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ்
வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குப் பதிலாக, அடக்குமுறையை கையில் எடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர ஆட்சியாளர்கள் முயல்கின்றனர்.
தொழிற்சங்கத் தலைவர்களை கைது செய்வது, 17-பி குறிப்பாணை வழங்குவது உள்ளிட்ட
செயல்களில் அரசு ஈடுபட்டிருக்கிறது. இது வேலைநிறுத்தம் தீவிரமடையவும்,
சட்டம் - ஒழுங்கு சிக்கல் ஏற்படவும் வழி வகுக்கும்.இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குப் பதிலாக, அடக்குமுறையை கையில் எடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர ஆட்சியாளர்கள் முயல்கின்றனர்.
இதனால் ஏழை மாணவர்களும், பொதுமக்களும்தான் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்தப் போராட்டத்தை விரைவாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. அதன்படி, போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப்பெற்று, அவர்களுடன் பேச்சு நடத்தி சுமுகத் தீர்வு காணவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.