கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் செயல்படும், 128 அரசு பள்ளிகளுக்கு,
'புதுமை பள்ளி விருது' வழங்க, மாநில - மாவட்ட அளவில், குழு
அமைக்கப்பட்டுள்ளது.பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், நேற்று
வெளியிட்ட செய்திக்குறிப்பு:அரசு பள்ளிகள் இடையே, ஆரோக்கியமான
கல்வி போட்டியை ஏற்படுத்தும் வகையில், பள்ளி கல்வி அமைச்சர் உத்தரவின்படி, புதுமை பள்ளி விருது வழங்கப்படுகிறது. 32 மாவட்டங்களிலும், தலா, ஒரு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி என, 128 பள்ளிகளுக்கு, விருதுகள் வழங்கப்படுகின்றன.
தொடக்க மற்றும்
நடுநிலை பள்ளிக்கு, தலா, 1 லட்சம் ரூபாய்; உயர்நிலை மற்றும் மேல்நிலை
பள்ளிக்கு, தலா, 2 லட்சம் ரூபாய் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.இதற்காக,
மாவட்ட அளவில், தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, அனைத்து
பள்ளிகளிலும் விண்ணப்பங்களை பெற்று, ஆய்வு செய்து, சமூக நல அமைப்புகள்,
சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் வழியே பெறப்படும் பரிந்துரைகளை
பரிசீலித்து, மதிப்பெண் அளிக்க வேண்டும்.இவற்றில், அதிக மதிப்பெண் பெறும்,
தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், தலா, மூன்று
வீதம், 12 பள்ளிகளை, ஒவ்வொரு மாவட்ட குழுவும், மாநில குழுவுக்கு
பரிந்துரைக்க வேண்டும்.வரும், 28ம் தேதிக்குள், மாநில குழுவின் உறுப்பினர்
செயலருக்கு கிடைக்கும் வகையில், மாவட்ட அளவிலான பட்டியலை சமர்ப்பிக்க
வேண்டும். அவற்றை, பள்ளி கல்வி இயக்குனர் தலைமையில், தொடக்க கல்வி, மாநில
கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர்கள், ஒருங்கிணைந்த கல்வி திட்ட
இயக்குனர் ஆகியோர் அடங் கிய குழு பரிசீலித்து, 128 பள்ளிகளை தேர்வு
செய்யும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளதுகல்வி போட்டியை ஏற்படுத்தும் வகையில், பள்ளி கல்வி அமைச்சர் உத்தரவின்படி, புதுமை பள்ளி விருது வழங்கப்படுகிறது. 32 மாவட்டங்களிலும், தலா, ஒரு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி என, 128 பள்ளிகளுக்கு, விருதுகள் வழங்கப்படுகின்றன.