ஈரோடு மாவட்டம் கோபி அருகே நடந்த அரசு விழா வில் கலந்து கொண்ட
அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்
கூறிய தாவது:-
கோபி கரட்டூரில் புதிதாக
கட்டப்பட்டு வரும் எம்.ஜி.ஆர். நுழைவு வாயிலில் முன்னாள் முதல்-அமைச்சர்
காமராஜர் பெயர் பொறித்த கல்வெட்டு அமைக்கப்பட உள்ளது. இந்த அரசு
காமராஜருக்கு புகழ் சேர்க்கும் விதமாக செயல்பட்டு வருகிறது. தேசத்தலைவர்களை
மதிக்கும் அரசாக உள்ளது.
காமராஜர் பிறந்த
நாளில் பள்ளிக்கூட மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
சுற்றுச்சூழல் துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்
பட்டுள்ளது.
தூய்மை பாரதம் என்று
சொல்லப்பட்டாலும், தமிழகம் பாலித்தீன் இல்லாத மாநிலமாக உருவாகி வருகிறது.
1200 பள்ளிக்கூடங்களில் தலா ரூ.20 லட்சம் செலவில் மத்திய அரசின் உதவியுடன்
அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன.
வரும் கல்வி ஆண்டில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு புதிய வண்ணச் சீருடைகள் வழங்கப்படும்.
பள்ளிக்கு
மாணவ-மாணவிகளின் வருகையை தெரிந்துகொள்ள சோதனை முறையில் பயோ மெட்ரிக் முறை
நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு
நடத்துவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.