மதுரை:''நேர்மையும் புதிய சிந்தனைத் திறனும் உள்ள இளைஞர்கள்
வாழ்க்கையில் எளிதில் சாதிக்க முடியும்'' என மூத்த ஆடிட்டரும் சென்னை
பி.கே.எப்.ஸ்ரீதர் மற்றும் சந்தானம் பர்ம் நிறுவன பங்குதாரருமான
சந்தானகிருஷ்ணன் தெரிவித்தார்.

மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி காலேஜ் ஆப் சயின்ஸ் (எஸ்.எல்.சி.எஸ்.) மற்றும் ஆர்.எல். இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸின் (ஆர்.எல்.ஐ.எம்.எஸ்.) 25வது ஆண்டு விழா கல்லுாரி தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி தலைமையில் நடந்தது.கல்லுாரி செயலர் டாக்டர் எல்.ராமசுப்பு நிர்வாக மேலாண்மையர் ஆர்.ராம்குமார் முன்னிலை வகித்தனர்.
சந்தானகிருஷ்ணன் பேசியதாவது:

மதுரை
சுப்பலட்சுமி லட்சுமிபதி காலேஜ் ஆப் சயின்ஸ் ஆர்.எல். இன்ஸ்டிடியூட் ஆப்
மேனேஜ்மென்ட் ஸ்டடீஸின் 25ம் ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு சென்னை
பி.கே.எப். ஸ்ரீதர் அன்ட் சந்தானம் பர்ம் நிறுவன பங்குதாரர் (வலமிருந்து
3வது) சந்தானகிருஷ்ணன், கல்லுாரி செயலர் டாக்டர் எல்.ராமசுப்பு, தலைவர்
டாக்டர் ஆர். லட்சுமிபதி பரிசு வழங்கினர். இடமிருந்து நிர்வாக மேலாண்மையர்
ராம்குமார், முதல்வர் சரவணன், துணை இயக்குனர் புகழேந்தி.
படித்தவுடன் வேலை கிடைத்து விடும் என மாணவர்கள் கருதக்கூடாது. படிப்பு என்பது வேலைவாய்ப்புக்கான ஒரு தகுதி. தற்கால சூழல் மற்றும் புதிய தொழில்நுட்பத்திற்கேற்ற பிற தகுதி
களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். இலக்கை முன்கூட்டியே நிர்ணயித்துக் கொண்டு அதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும்.தொழில்முனைவோராகவிரும்புவோர் சமு
தாயத்தில் எல்லோருக்கும் என்ன அதிகம் தேவைப்படுகிறது என்பதை ஆராய்ந்து அதுசார்ந்த தொழில்களை தேர்வு செய்தால் வெற்றி பெறலாம்.
சாதிக்க வயது ஒரு தடை இல்லை. 13 வயது சிறுவன் ஆதித்யா சர்மா துபாயில் சாப்ட்வேர் நிறுவனம் துவக்கினார். அலைபேசி 'செயலி' கண்டுபிடித்தபோது அவருக்கு 9 வயது. அதேபோல் சரக்கு போக்குவரத்து தொழில் துவங்கி பிரபலமடைந்த திலக் மேத்தாவிற்கு வயது 13. சாதிக்க புதிய சிந்தனைகள் அவசியம் என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
டாக்டர் ஆர்.லட்சுமிபதி பேசியதாவது:கல்விதான் சிறந்த வாழ்க்கைக்கான அடித்தளம். இதுவே இக்கல்லுாரியின் நோக்கம். தற்போது ஒரு பணிக்கு 100 இளைஞர்கள் போட்டியிடும் நிலை
உள்ளது. படிக்கும்போதே வேலைக்கான தகுதியை பலர் வளர்த்துக்கொள்வதில்லை. ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து எதிர்கால தேவைக்கு ஏற்ற பாடத் திட்டங்களை கல்வி நிறுவனங்கள் கற்பிக்க வேண்டும் என்றார்.
எஸ்.எல்.சி.எஸ். முதல்வர் சரவணன் ஆர்.எல்.ஐ.எம்.எஸ். இணை இயக்குனர் புகழேந்தி ஆண்டறிக்கை வாசித்தனர். ஆலோசகர் (தொழில்நுட்பம்) சுப்பிரமணியன் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர். பேராசிரியை பிரியா வரவேற்றார். பேராசிரியை அம்ருதா வீனா நன்றி கூறினார்.