சென்னை, இன்ஜினியரிங் கவுன்சிலிங்கை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வழியே,
தமிழக அரசு நடத்த முடிவு செய்துள்ளது. எனவே, இன்ஜி., கவுன்சிலிங் கமிட்டி
பணியில் இருந்து, துணைவேந்தர், சுரப்பா விலகியுள்ளார்.அண்ணா பல்கலை வழியே, 20 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த கவுன்சிலிங்கை, வரும் கல்வி யாண்டு முதல், தொழில்நுட்ப கல்வி இயக்குன ரகம் வழியே நடத்த, தமிழக உயர்கல்வி துறை முடிவு செய்துள்ளது.
கவுன்சிலிங் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக, அண்ணா பல்கலை துணை வேந்தர், சுரப்பாவும், உறுப்பினர் செயலராக, பல்கலை பேராசிரியர், ரைமண்ட் உத்தரிய ராஜும் நியமிக்கப்பட்டனர்.இதுவரை உறுப்பின ராக இருந்த, தொழில்நுட்ப கல்வி துறை இயக்குனர், விவேகானந்தன், இந்த ஆண்டு துணை தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். கமிட்டி ஒருங்கிணைப்பாளராக,உயர் கல்வி செயலர், மங்கத்ராம் ஷர்மா நியமிக்கப்பட்டு
இந்நிலையில், கவுன்சிலிங் கமிட்டியின் தலைவர் பொறுப்பில் இருந்து, துணைவேந்தர் சுரப்பா விலகி உள்ளார். தன் விலகல் கடிதத்தை, உயர்கல்வி செயலருக்கு, அவர் அனுப்பியுள்ளார். இது குறித்து,துணைவேந்தர் சுரப்பா கூறியதாவது:இன்ஜி., பாடம் நடத்துவது, பாட திட்டம் தயாரித்தல், ஆராய்ச்சி பணிகளை மேம்படுத்துதல் போன்றவற்றுக்கு, அண்ணா பல்கலை,அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஆராய்ச்சி பணிகளை இன்னும் மேம்படுத்தும் வகையில், பேராசிரியர்களுக்கு அதிக பணிகள் உள்ளன. மேலும், பொது தேர்தல் பணிகளையும், பேராசிரியர்கள் எதிர்கொள்ளலாம்.
எனவே, இன்ஜி., கவுன்சிலிங்கை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் மேற்கொள்ள உள்ளது. எங்களை பொறுத்தவரை, தொழில்நுட்ப ரீதியாக கவுன்சிலிங்குக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவோம். இதில், எந்த பிரச்னையும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில், கவுன்சிலிங் முறையில் மாற்றம் செய்துள்ளது குறித்து, உயர்கல்வி அமைச்சர், அன்பழகன் கூறியதாவது:தமிழக உயர்கல்வி துறை கமிட்டி தான், அண்ணா பல்கலை வழியே, கவுன்சி லிங்கை நடத்தி வருகிறது. வரும் கல்வி யாண்டில், அண்ணா பல்கலைக்கு பதில், தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் வழியே, கவுன்சிலிங் நடத்தப்படும். இதுகுறித்து, விரிவான ஆலோசனை நடத்தப்படும்.
தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் ஏற்கனவே,








