நடிகராக மட்டுமின்றி, சமூக பொறுப்பாளராகவும் இருந்து வருபவர், விவேக்;
தமிழகத்தை பசுமையாக்க, மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அடுத்ததாக, தமிழக அரசின் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பிரசாரம் செய்தார்.
தற்போது, தேர்தல் நேரம் என்பதால், சமூக வலைதளங்கள் வாயிலாக, 100 சதவீத
ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, தேர்தல் கமிஷனுக்காக பிரசாரத்தை
துவக்கினார்.தற்போது, 'நோட்டுக்காக ஓட்டு போடாதீங்க' என்ற, பிரசாரத்தை
துவக்கியுள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்
கூறியிருப்பதாவது:உங்களுக்கும், இந்த தேசத்திற்கும், இது முக்கியமான நேரம்;
தேர்தல் நேரம். இந்தியாவின் சிறப்பே, அதன் ஜனநாயக அமைப்பு தான். இதன்
சிறப்பே, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, இந்த நாட்டை யார் ஆள வேண்டும் என,
தேர்ந்தெடுக்கும் மக்களின் வாக்குரிமை.உண்மையிலேயே மக்கள் தான் கிங்
மேக்கர்ஸ்.
ராஜாக்களை உருவாக்குகிற ராஜாக்களே மக்கள் தான். அந்த ராஜாக்கள்
பிச்சை எடுக்கலாமா... அதாவது, ஓட்டுக்காக நோட்டு வாங்கலாமா... கொஞ்சம்
யோசிச்சு பாருங்க!நம் தமிழ்நாட்டுக்கென பாரம்பரியம், வரலாறு உண்டு. ஆயிரம்
வருஷத்திற்கு மேலான, தஞ்சை பெரிய கோவில், 2,000 வருஷத்திற்கு மேலான,
கரிகாலன் கட்டிய கல்லணை, 2,500 வருஷத்திற்கு முந்தைய திருக்குறள் என, நம்
பாரம்பரியம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.இதுல நாம் என்ன பண்ணலாம். இந்த
நாட்டை வளமாக்கும் நல்லவர்கள் கையில் ஒப்படைக்கலாமே! இது, நமது வாக்குரிமை
என்பதை, நாம் யோசித்து பார்க்க வேண்டும். நாம் செய்கிற பணியை பாராட்ட, நம்
சந்ததியினர் வருவார்கள். அப்படிப்பட்ட நல்ல காரியத்தை நாம்
பண்ணவேண்டும்.இவ்வாறு, விவேக் கூறியுள்ளார்.10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
நோட்டுக்காக பிச்சை எடுக்கலாமா? பிரசாரம் செய்யும் நடிகர் விவேக்:
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |







