தாய்மார்கள், குழந்தைகளின் தடுப்பூசி
அட்டவணையை சரியாக மருத்துவரிடம் கேட்டு பெற்று கொண்டு அதை குழந்தைகளின் 5
வயது வரை சரியாக பின்பற்ற வேண்டும்.
பொதுவாக ஊசி என்றால் குழந்தைகளுக்கு
அலர்ஜி தான். ஆனால், தடுப்பூசி என்பது நம் ஆரோக்கிய வாழ்விற்கு மிக
அவசியமாகும். தடுப்பூசியினால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் பற்றி
செந்திலாண்டவர் மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் தெய்வேந்திரன்
கூறும்போது,
முன்பெல்லாம் அம்மை நோய், கக்குவான் இருமல், தொண்டை அடைப்பான் இருமல்,
காலரா, நிம்மோனியா போன்ற நோய்களினால் இறப்பு சதவிகிதம் அதிகம். தடுப்பூசி
என்பது கண்டறியப்பட்ட பின்பு இந்த நோய்களில் சிலவற்றை முற்றிலும் அழிக்க
முடிந்தது. தடுப்பூசியினால் மற்ற நோய்களும் வராமல் தடுக்க முடியும்.