மதுரை, ''கலை, அறிவியல் படிப்புகளை மாணவர்கள் தேர்வு செய்தால், ஏராளமான
வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன,'' என மதுரையில் நடக்கும் தினமலர்
வழிகாட்டி நிகழ்ச்சியில் சென்னை சாய்ராம் பல்கலை இயக்குனர் மாறன்
தெரிவித்தார்.மதுரை லட்சுமி சுந்தரம் மகாலில் நடக்கும் இந்நிகழ்ச்சியில்
'கலை அறிவியல் படிப்புகள்' குறித்து அவர் பேசியதாவது:பிளஸ் 2விற்கு பின்
என்ன படிக்க வேண்டும் என்ற குழப்பம் மாணவர்களுக்கு ஏற்படும். அதேநேரம்
படிப்பு மீதான ஆர்வமும் அதிகரிக்க வேண்டும். கல்வி தான் ஒருவரை
வாழ்க்கையில் முழு மனிதனாக மாற்றும். மதிப்பெண்களுக்கு தகுந்தவாறு
எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் ஏராளமான கலை, அறிவியல்
படிப்புக்கள் உள்ளன. அந்த வகையில் கணிதம் படிப்பை தேர்வு செய்யலாம்.
அறிவியல் தொழில்நுட்பம் முதல் விண்வெளி படிப்புகள் தொடர்புடைய அனைத்து
பாடங்களுக்கும் அடிப்படை கணிதம் தான். பி.காம்., சி.ஏ., படிப்புகளை தேர்வு
செய்யலாம். காப்பீடு, பிசினஸ் அனாலிட்டிக்ஸ், பங்கு சந்தை தொடர்பான துறைகளை
தேர்வு செய்தால் ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.
இதையடுத்து
பி.எஸ்சி., வேதியியல், இயற்பியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், வெப் டிசைனிங்,
விஷூவல் கம்யூனிகேஷன் போன்ற படிப்புகள் படித்தவுடன், கூடுதல் தகுதிகளையும்
வளர்த்துக்கொண்டால் வேலை வாய்ப்புகள் உடன் கிடைக்கும்.குறைந்த மதிப்பெண்
பெறும் மாணவர்கள் கலைப் பிரிவில் வரலாறு, சமூக அறிவியல் படித்தால் டூரிஸம்
சார்ந்த வேலை வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. பொருளியல், ஆங்கில
இலக்கியம், தமிழ் போன்ற படிப்புகள் படித்து போட்டித் தேர்வுகளில்
சாதிக்கலாம். எதிர்கால தேவைக்கேற்ப என்ன படிக்கலாம் என்பதை மாணவர்கள்
சிந்தித்து படிப்புகளை தேர்வு செய்ய வேண்டும், என்றார்.படித்தவுடன் வேலை
கிடைக்கும் மீடியா படிப்புகள்'மீடியா மற்றும் விஷூவல் கம்யூனிகேஷன்'
குறித்து மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி பேராசிரியர் ரகு
காளிதாஸ் பேசியதாவது:அதிகமாக வளர்ந்து வரும் துறைகளில் மீடியா மற்றும்
விஷூவல் கம்யூனிகேஷன் முன்னணியில் உள்ளது. ஆண்டிற்கு பல கோடி ரூபாய்
முதலீடுகள் குவியும் துறை இது.ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்களை தருவது
மீடியாக்கள். அவசர உலகில் மிக குறைந்த நேரத்தில் தகவல்களை தெரிவிப்பது
மீடியாக்களுக்கு சவாலான விஷயம். கிரியேட்டிவ், புதிய சிந்தனைகள்,
தொழில்நுட்ப அறிவு இருந்தால் இத்துறையில் மாணவர்கள சாதிக்கலாம். கற்பனை
திறன், கலை உணர்வு உள்ள இளைஞர்களுக்கு இது கனவு துறையாகும்.தொலைக்காட்சி
சேனல்களில் நிகழ்ச்சிகள் தயாரித்து வழங்கும் நிறுவனங்களில் ஏராளமான
வேலைவாய்ப்புக்கள் கொட்டிக்கிடக்கின்றன.வீட்டில் இருந்தே சம்பாதிக்கும்
டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொழிலில் ஈடுபடலாம். யு டியூப், வெப்சைட்டுகளும்
துவங்கலாம்.கல்லுாரிகளை தேர்வு செய்யும் போது அப்படிப்புகளுக்கு பல்கலை
அங்கீகாரம் உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். தன்னாட்சி
கல்லுாரியாக இருந்தால் சிறந்த கல்வி கிடைக்கும்.மதுரையில் உள்ள
சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி உட்பட தரமான கட்டமைப்பு உள்ள
கல்லுாரிகளை மாணவர்கள் தேர்வு செய்வது அவசியம், என்றார்.180 நாடுகளிலும்
வேலைவாய்ப்புகள்'வணிகம் வங்கி மற்றும் இன்சூரன்ஸ்' குறித்து ஐ.எஸ்.டி.சி.,
ரீஜனல் மேனேஜர் அரவிந்த் பேசியதாவது:பி.காம்., படிக்க விரும்பும் மாணவர்கள்
கூடுதல் தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டிற்கும்
மதுரையில் மட்டும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பி.காம்., பட்டதாரிகள்
உருவாகின்றனர்.இவற்றில் கூடுதல் திறமை, தகுதிகள் இருந்தால் தான் நல்ல
சம்பளத்தில் வேலை கிடைக்கும்.பி.காம்., படிப்புடன் இத்துறையில் சர்வதேச
அளவில் திறமை மற்றும் தகுதிகளை வளர்த்துக்கொள்ள ஏ.சி.சி.ஏ., போன்ற கூடுதல்
தகுதிக்கான படிப்புகளை படிக்க வேண்டும். இந்த 'கோர்ஸ்' முடித்தால் 180
நாடுகளிலும் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன என்றார்.10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
கலை,அறிவியல் படிப்புகளுக்கு காத்திருக்கு வேலை தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் நிபுணர்கள் ஆலோசனை:
கலை,அறிவியல் படிப்புகளுக்கு காத்திருக்கு வேலை தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் நிபுணர்கள் ஆலோசனை:
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |







