ஆராய்ச்சிக்கான நிதி: அறிக்கை கேட்கிறது மத்திய அரசு Fund for research: The report asks the Central government
ஆராய்ச்சிகளுக்காக வழங்கப்பட்ட நிதி குறித்த அறிக்கையை அளிக்க, மருத்துவக்
கல்லுாரிகளுக்கு மத்திய ஆராய்ச்சி துறை உத்தரவிட்டுள்ளது.மத்திய அரசு,
மருத்துவ ஆராய்ச்சிகளை ஊக்குவித்து வருகிறது. மாணவர்கள் அதிகளவு
ஆராய்ச்சியில் ஈடுபட, குறிப்பிட்ட கால இடைவெளியில் நிதி வழங்குகிறது.
மத்திய சுகாதார துறையின் கீழ் செயல்படும் மருத்துவஆராய்ச்சி துறையின்
வாயிலாக, இது செயல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், ஆராய்ச்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி வாயிலாக வாங்கிய
கருவிகள், புத்தகங்கள், மேற்கொண்ட ஆராய்ச்சிகள், முடிவுகள் குறித்து
அறிக்கை அளிக்க, அனைத்து மருத்துவ கல்லுாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில், 'மத்திய அரசு ஒதுக்கிய பல கோடி
ரூபாய் வாயிலாக, பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வரும், 3ம் தேதி, டில்லியில் நடக்க உள்ள கூட்டத்தில் அந்தந்த மருத்துவக்
கல்லுாரியின் பிரதிநிதிகள் பங்கேற்பர். கூட்டத்தில், ஆராய்ச்சி குறித்த
ஆலோசனை நடத்தப்பட உள்ளது' என்றனர்