இந்திய பட்ட படிப்புகளுக்கு அரபு நாடுகளில் அங்கீகாரம் Indian Studies have been recognized in Arab countries
ஐக்கிய அரபு எமிரேட்சில், 33 லட்சம் இந்தியர்கள் பணியாற்றுகின்றனர்; இது,
அந்த நாட்டின் மொத்த தொகையில், 30 சதவீதம்.இந்நிலையில், நம் நாட்டினர்,
இங்குள்ள சில பட்டப் படிப்புகளை முடித்து, ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு
வேலைக்காக செல்லும் போது, அந்த படிப்புகளுக்கு, அங்கு, போதிய அங்கீகாரம்
வழங்கப்படாமல் இருந்தது.
இதன் காரணமாக, பலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு வருகின்றன.இந்த
பிரச்னைக்கு சுமுக தீர்வு காண, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கல்வி அமைச்சர்
ஹுசைன் பின் இப்ராஹிமை, இந்திய துாதர் நவ்தீப் சிங் சூரி, சமீபத்தில்
சந்தித்து பேசினார்.இதில், நல்ல முடிவு எட்டப்பட்டுள்ளது.இது குறித்து,
ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள இந்திய துாதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கூறப்பட்டுள்ளதாவது:இந்திய பட்டப் படிப்புகளில், அக மதிப்பெண், புற
மதிப்பெண் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வருகின்றன. இது பற்றி, இங்குள்ள
கல்வி அமைச்சகத்திற்கு தெளிவில்லாமல் இருந்தது;
அவை, சில குழப்பங்களை ஏற்படுத்தி வந்தன.அக மதிப்பெண் என்பது, மதிப்பீட்டு
முறையில் பின்பற்றப்படும் நடைமுறையே தவிர, அது, வெளியே படித்ததற்கான
குறிப்பு அல்ல என்பதை, ஐக்கிய அரபு நாடுகளின் கல்வி அமைச்சகத்துக்கு
தெளிவுபடுத்தப்பட்டது.
இதை, அந்நாட்டு அரசு ஆய்வு செய்து, இந்திய பட்டப்படிப்புகளுக்கு, இனி,
ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள படிப்பு களுக்கு இணையான அந்தஸ்து வழங்க
நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்துஉள்ளது.இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.