Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
பிளஸ் 1, பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வுகள்: மே 3 முதல் விண்ணப்பிக்கலாம் :
*தமிழகத்தில் கடந்த மார்ச் 2019-இல் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்
தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், வருகை புரியாதவர்கள், அதுபோல் 2018 மார்ச்,
ஜூன் பருவத் தேர்வுகளில் பிளஸ் 1 தேர்வுக்கு வருகை புரியாத, தேர்ச்சி
பெறாத பாடங்களை மார்ச் 2019 பருவத்தில் தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர்கள்
வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2, பிளஸ் 1 சிறப்புத் துணைத் தேர்வெழுத
விண்ணப்பிக்கலாம்*
*இந்த சிறப்புத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும்
பள்ளி மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள்
தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் மட்டுமே ஆன்லைனில்
விண்ணப்பிக்க இயலும்*
*தேர்வர்கள் பள்ளிகள் அல்லது தேர்வு மையங்களுக்கு வரும் மே
3-ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் மே 8-ஆம் தேதி புதன்கிழமை
பிற்பகல் 5.45 மணி வரையான நாள்களில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க
வேண்டும். தனியார் பிரௌசிங் மையங்கள் மூலம் விண்ணப்பிக்க முடியாது*
*❇❇தேர்வர்கள் கவனத்துக்கு*
*பிளஸ் 1 பொதுத்தேர்வை பழைய பாடத் திட்டத்தில் தேர்வெழுதி
தேர்ச்சி பெறாதவர்கள், வருகை புரியாதவர்கள் தேர்ச்சி பெறாத பழைய பாடத்
திட்டத்தில் தேர்வெழுத ஜுன் 2019 நடைபெறும் சிறப்புத் துணைத் தேர்வே இறுதி
வாய்ப்பாகும்*
*அதே போன்று பிளஸ் 2 பழைய பாடத் திட்டத்தில் தேர்வெழுதவும்,
பழைய நடைமுறையின்படி (மொத்தம் 1,200 மதிப்பெண்களுக்கு) தேர்வெழுதவும் ஜுன்
2019 பருவம் மட்டுமே இறுதி வாய்ப்பாகும். மேலும் பிளஸ் 2 பொதுத்தேர்வினை
புதிய நடைமுறையின்படி (மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு) தேர்வு எழுதிய
தேர்வர்களுக்கு பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுத ஜுன் 2019 பருவம் மட்டுமே
இறுதி வாய்ப்பாகும்*
*புதிய பாடத்திட்டத்தில் முதல் முறையாக மார்ச் 2019-இல் பிளஸ்
1 பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கு தேர்வு
முடிவுகள் வெளியிட்ட பின்னர், தேர்ச்சி பெறாத, வருகை புரியாத பாடங்களில்
ஜுன் 2019 பிளஸ் 1 சிறப்பு பொதுத் தேர்வின்போது தேர்வெழுதுவதற்கு
விண்ணப்பிக்க தேதி பின்னர் அறிவிக்கப்படும்*
*பிளஸ் 2 வகுப்பு தேர்வர்களுக்கான ஜூன் மாத சிறப்பு துணைத்
தேர்வு வரும் ஜுன் 6-ஆம் தேதி முதல் ஜுன் 13-ஆம் தேதி வரையிலான
நாள்களிலும், பிளஸ் 1 தேர்வர்களுக்கு (பழைய, புதிய பாடத் திட்டம்)
சிறப்புத் துணைத் தேர்வு வரும் ஜுன் 14-ஆம் தேதி முதல் ஜுன் 21 வரையிலான
நாள்களிலும் நடைபெறும். இந்த இரு வகுப்புகளுக்கான சிறப்பு துணைத் தேர்வு
கால அட்டவணையை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்*
*🔰🔰தேர்வுக் கட்டணம் செலுத்தும் முறை*
*தனித்தேர்வர்கள் ஒரு பாடத்துக்கு ரூ.50 மற்றும் இதர கட்டணம்
ரூ.35, ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50 சேர்த்து பணமாக மட்டுமே செலுத்த
வேண்டும். தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து
கொள்ள வேண்டிய நாள்கள் குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும்*
*தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம்
குறித்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் அறிந்து கொள்ளலாம் என அரசுத்
தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்*
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








