
சென்னை: தமிழகத்தில்
4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் மே 19ல் நடக்கவிருந்த
தேர்வை ஒத்திவைத்தது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
அருங்காட்சியக பொறுப்பாளர் பணிக்கான தேர்வு மே 19ம் தேதி நடைபெற இருந்த
நிலையில், அது ரத்து செய்யப்பட்டு, மே 25ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த
முடிவினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.