*ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் 3, 4, 5, 8 வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் ஜூன் 10-ஆம் தேதி தான் கிடைக்கும் என அரசு பாடநூல் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்*.
*கடந்த ஆண்டு 1, 6, 9, 11-ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 2, 7, 10, 12-ஆம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டு அச்சுப் பணிகள் நிறைவடைந்தன*.
*இதனிடையே 3, 4, 5, 8 வகுப்புகளுக்கும் இந்த கல்வி ஆண்டிலேயே புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்த நிலையில் பாடபுத்தகங்கள் தயாரிப்புப் பணிகள் அவசர அவசரமாக நடைபெறுகின்றன*.
*பாடப் புத்தகங்கள் கிடைக்கும் வரை ஆசிரியர்கள் www.textbooksonline.tn.nic.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து பாடங்களை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்*.