மதுரை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் சார்பில் நடக்கும் பள்ளி இடைநிற்றல் குழந்தைகளை கண்டறியும் பணியில் குழந்தைகளை கண்டறிவது பெரும் சவாலாக உள்ளது என ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
மாவட்டத்தில் இந்தாண்டு 800 பேர் கண்டறிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக 15 கல்வி ஒன்றியங்களிலும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தி தலைமையில் வட்டார வள மைய அலுவலர்கள் (பி.ஆர்.டி.,க்கள்) மற்றும் சிறப்பாசிரியர் என 142 பேர் ஈடுபட்டுள்ளனர்.மதுரையில் பல பகுதிகளில் குழந்தை தொழிலாளர் உள்ளனர். அவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் விரும்பவில்லை. இதனால் 'சம்பந்தப்பட்ட குழந்தை வெளியூரில் இருந்து விடுமுறைக்கு வந்துள்ளது, உறவினர் வீட்டு பிள்ளை, ஏற்கனவே பள்ளியில் படிக்கிறது...' என தவறான தகவல்கள் தருகின்றனர்.