யாரெல்லாம் Income tax கட்ட வேண்டும்? உங்களின் ஆண்டு வருமான 2 லட்சத்துக்கு அதிகமா? மிஸ் பண்ணாம படிங்க!
income tax filing online : 2019-20 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாளாக ஜூலை 31 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரி கட்டுவதற்கான தொடர் விளம்பரங்கள் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் யாரெல்லாம் வருமான வரி கட்ட வேண்டும் என சந்தேகம் எல்லோருக்கும் தோன்றுவது இயல்பு. உங்கள் சந்தேகத்தை போக்க தான் இந்த செய்தித் தொகுப்பு.
யாரெல்லாம் வருமான வரி கட்ட வேண்டும்?
1. சம்பளத்திலிருந்து வருமானம் பெறும் நபர்கள்.
2. ஓய்வூதியத்திலிருந்து வருமானம் பெறும் நபர்கள்.
3. ஒரு வீட்டிலிருந்து வருமானம் பெறும் நபர்கள், முந்தைய ஆண்டுகளிருந்து நட்டங்கள் கொண்டுவரப்படாதப் பட்சத்தில்.
4. பிற மூலங்களிருந்து பெறப்படும் வருமானம், குலுக்கல்களின் வெற்றிகள் மற்றும் பந்தையக் குதிரைகளின் வருமானம் தவிற்று.
ITR-2
1)வியாபாரம் அல்லது தொழிலிருந்து வருமானம் கிடைக்காத நபர்கள்.
2)வியாபாரம் அல்லது தொழிலிருந்து வருமானம் கிடைக்காத இந்து கூட்டுகுடும்பம்.
ITR-3
1)தனிநபர் நிறுவனத்திற்கு அடியில் (sole proprietor) வியாபாரம் அல்லது தொழில் நடத்தப்படாத குறுநிறுமத்தின் (Firm) பங்காளிகளாக வகிக்கும் நபர்கள்.
2)தனிநபர் நிறுவனத்திற்கு (sole proprietor) அடியில் வியாபாரம் அல்லது தொழில் நடத்தப்படாத பதிவுறா நிறுவனத்தின் பங்காளிகளாக வகிக்கும் இந்து கூட்டுக் குடும்பம்.
ITR-4
1)தனிநபர் நிறுவனத்திலிருந்து அல்லது தொழிலிருந்து வருமானம் பெறும் நபர்கள்.
2)தனிநபர் நிறுவனத்திலிருந்து அல்லது தொழிலிருந்து வருமானம் பெறும் இந்து கூட்டுக் குடும்பம்.
2019 – 20 ஆண்டிற்கான வருமான வரி விதிமுறைகள்:
1. 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமான வரம்பிற்குள் வருபவர்களுக்கு முழு வரி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நிதி ஆண்டுக்கான வருமான வரியை அடுத்த ஆண்டு தாக்கல் செய்யும் போது 5 லட்சம் ரூபாய் வரையிலான ஆண்டு வருவாய்க்கு வரி செலுத்தத் தேவையில்லை.
2. மருத்துவச் செலவுகள் மற்றும் பயணப் படி போன்றவற்றுக்கான வரி கழிவு 40,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
3. முன்பு வங்கி கணக்கில் உள்ள இருப்புத் தொகை மற்றும் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் செய்துள்ள முதலீடுகளின் மூலம் வரும் வட்டி வருவாய் 10,000 ரூபாய்க்கும் அதிகமாக இருந்தால் அதற்கு வரி செலுத்த வேண்டும். இந்த நிதியாண்டு முதல் அது 40,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
4. ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வீடு உள்ளது என்றால் அதற்கு தேசிய வரி செலுத்த வேண்டும் என்ற விதியை இந்த ஆண்டு முதல் இரண்டாவது வீட்டை சொந்த பயன்பாட்டிற்குப் பயன்படுத்தும் போது வரி செலுத்தத் தேவையில்லை. சொந்த ஒரு ஊரில் ஒரு வீடும், வேலைக்காகச் சென்ற இடத்தில் ஒரு வீடும் என்று மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் வாடகைக்கு விடாமல் சொந்த பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்தினால் வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிப்பதாக பட்ஜெட்டின் போது பியூஷ் கோயல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Thanks web channal ie tamil
ஆசிரியர் TECH
YOUTUBE