இன்றைய தொழில்நுட்ப உலகில், தகவல் பரிமாற்றத்தில் வாட்ஸ்-அப் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 25கோடி பேர் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
அதேசமயம், இச்செயலியின் மூலம் வதந்திகள் மற்றும் தவறான தகவல்களும் காட்டுத்தீ போல் வேகமாக பரப்பப்படுகிறது.
இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில்தான், வாட்ஸ்-அப் மூலம்
ஒரு முறை 5 நபர்களுக்கு அல்லது 5 குழுக்களுக்கு மேல் ஒரு தகவலை பரிமாற்றம்
செய்ய முடியாதபடி, கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது.
இந்த கட்டுப்பாட்டையும் மீறி, வாட்ஸ் -அப் வசதியை பயன்படுத்தி, அதிகப்படியான நபர்களுக்கு தகவல்களை பரிமாற்றம் செய்வோரின் வாட்ஸ் -அப் கணக்கை முடக்கியோ, நீக்கியோ அந்நிறுவனம் தற்போது நடவடிக்கை எடுக்க முடியும்.

இந்த நிலையில், வாட்ஸ்-அப்பின் தானியங்கி தொழில்நுட்ப வசதி மற்றும் பிற
வழிகளில் அளவுக்கு அதிகமான தகவல்களை (Bulk messages) பரிமாற்றம் செய்யும்
தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள், அதற்கு உதவியாக இருப்பவர்கள் மீது
சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் டிசம்பர் 7 -ஆம் தேதி முதல் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் எச்சரித்துள்ளது.
வரும் டிசம்பர் 7 -ஆம் தேதி முதல் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் எச்சரித்துள்ளது.