குரலை வைத்தே மனிதர்களின் முகத்தை ஓரளவு கண்டறியும் செயற்கை நுண்ணறிவுத்
தொழில்நுட்பத்தை அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று கண்டறிந்துள்ளது.ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் எனும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன்
ஆர்டிபிசியல் நியூரல் நெட்வொர்க்கை ((artificial neural networks))
பயன்படுத்தி இது வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சம் யூடியூப்
கிளிப்களில் இருந்து எடுக்கப்பட்ட சில நிமிட குரல் பதிவை மட்டுமே கொண்டு
அவர்களின் முக அமைப்பை ஓரளவு வடிவமைக்கமுடியும் என மசாசுசெட்ஸ்
தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதேபோல் தொலைபேசியில் சில நிமிட குரல் பதிவைக் கொண்டும் அவர்களின் உருவத்தை
வடிவமைக்கக் கூடும் என கூறியுள்ளது. பேசுபவர்களின் வயது என்ன? உலகின் எந்த
பகுதியைச் சேர்ந்தவர்? பாலினம் என்ன? என்பதை இந்த தொழில்நுட்பம்
கண்டறிகிறது. இருப்பினும், ஆசியாவைச் சேர்ந்த அமெரிக்கர் சீன மொழி பேசினால்
அவர் ஆசியர் எனக் கூறும் அந்த தொழில்நுட்பம், அதே நபர் ஆங்கிலம் பேசினால்
அவன் ஆங்கிலம் பேசும் நாடுகளைச் சேர்ந்தவன் என தவறாகக் கணிக்கிறது. எனவே
அதை மேம்படுத்தும் முயற்சி நடைபெற்று வருகிறது.