காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள்-16.07.2019 - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Tuesday 16 July 2019

காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள்-16.07.2019

இன்றைய திருக்குறள்*

 காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
 ஞாலத்தின் மாணப் பெரிது.

*மு.வ உரை*:
உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.

*கருணாநிதி  உரை*:
தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்.
*சாலமன் பாப்பையா உரை*:
நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும்.

✡✡✡✡✡✡✡✡

*பொன்மொழி*

சிந்திக்க தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவையில்லை.
துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை.
  _அப்துல் கலாம்.

♻♻♻♻♻♻♻♻

*பழமொழி*

A man of courage never wants weapons

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

🌿☘🌿☘🌿☘🍀🌿

*உடல் நலம்*

*சூர்ய நமஸ்காரம்*

பலர் மூட்டு வலியால் நிறைய அவஸ்தைப்படுகின்றனர். இத்தகைய மூட்டு வலியை குணப்படுத்த சூரிய நமஸ்காரத்தில் வரும் நிலைகளை  செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

⚜⚜⚜⚜⚜⚜⚜

*Important  Used Words*

 Spinach பசலைக்கீரை

 Sapota சப்போட்டா

 Sugar Cane கரும்பு

 Sun Flower சூரியகாந்திப்பூ

 Sweet Lime சாத்துக்குடி

✍✍✍✍✍✍✍✍

*பொது அறிவு*

1. இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை?

ரிப்பன் பிரபு

2.இந்திய ரயில்வேயின் தந்தை?

டல்ஹௌசி பிரபு

3.இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை?

சுவாமிநாதன்

🧬🧬🧬🧬🧬🧬🧬🧬

*Today's grammar*

*Articles(a,an,the) are not used:*

Before the name of a person:
*Example:*

I am a fan of Michael Jackson. (not A or The Michael Jackson)

Before the name of a place, town, country, street, or road.
*Example:*

Barcelona is a beautiful city. (not A or The Barcelona)

Before names of materials.
*Example:*

Gold is found in Australia. (not A or The gold)

Before abstract nouns used in a general sense.
*Example:*

We love all beauty. (not a beauty or the beauty)

📫📫📫📫📫📫📫📫

*அறிவோம் தமிழ்*

*நவரத்தினங்கள்*

மரகதம்,
மாணிக்கம்,
முத்து,
வைரம்,
வைடூரியம், கோமேதகம்,
நீலம்,
பவளம்,
புட்பராகம்.

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்றைய கதை*

*கழுகின் நன்றியுணர்ச்சியும்*நரியும்*

ஒரு நாள் வேடன் ஒருவன் வேட்டையாட சென்றிருந்தான். அவன் விரித்திருந்த வலையில் கழுகு ஒன்று சிக்கிக்கொண்டது. அந்த கழுகின் சிறகுகளை மட்டும் வெட்டி சங்கிலியால் கட்டிப் போட்டான். அவ்வழியே சென்ற ஒருவர் கழுகின் மீது இரக்கப்பட்டு வேடனிடம் காசு கொடுத்து அந்தக் கழுகை வாங்கி தன் வீட்டில் அன்புடன் வளர்த்தார்.

 இறக்கைகள் நன்கு வளர்ந்தது பின் அதைப் பறக்க செய்தார். கழுகு பறந்து செல்லும் போது ஒரு முயலைப் பார்த்தது. அதை தூக்கி வந்து தன்னை வளர்த்தவரிடம் காணிக்கையாகக் கொடுத்தது.

 இதைப் பார்த்த நரி உன்னைப் பிடித்த வேடன் மறுபடியும் பிடிக்க வரலாம் நீ இந்த முயலை அவனிடம் கொடுத்திருந்தால் மறுபடியும் அவன் உன்னைப் பிடிக்காமல் இருப்பான். எதற்காக அவரிடம் கொடுத்தாய் என கழுகிடம் கேட்டது.

 இல்லை நீ சொல்வது தவறு. வேடனிடம் நான் முயலைக் கொடுத்தாலும் பிற்காலத்தில் அவன் என்னை பிடிக்காமல் இருக்கபோவதில்லை ஆனால் நான் ஆபத்தில் இருந்தபோது என்னைப் காப்பாற்றியவருக்கு என் நன்றியையும் விசுவாசத்தையும் தெரிவிக்கவே முயலைக் காணிக்கையாகச் கொடுத்தேன் எனப் பதில் கூறியது கழுகு.

*நீதி* :
உதவி செய்தவரிடம் நன்றியோடு இருப்பது தான் பண்புள்ள செயல்.

🧾🧾🧾🧾🧾🧾🧾🧾

*செய்திச் சுருக்கம்*

🔵பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சந்திரயான் - 2 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதற்கு சற்று முன் தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால், கவுன்டவுன் நிறுத்தப்பட்டது.

🔵பெருங்களத்தூர் டூ சிங்கப்பெருமாள் கோவில் சாலையை 8 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தொடக்கம் : பேரவையில் முதல்வர் அறிவிப்பு.

🔵அமர்நாத் யாத்திரை சென்ற மேலும் இரு பக்தர்கள் உயிரிழப்பு - இந்த ஆண்டின் பலி எண்ணிக்கை 16 ஆனது.

🔵தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்.

🔵செக் குடியரசின் கிளாட்னோ நகரில் நடைபெற்ற சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

🔵மாண்டனிக்ரோ நாட்டில் நடந்த, சர்வதேச, 'மெடி' ஒலிம்பிக் தடகள போட்டியில், சென்னை கல்லுாரி மாணவர், இரண்டு தங்கப்பதக்கம் வென்று, இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

♻♻♻♻♻♻♻♻

*தொகுப்பு*

T.தென்னரசு,
இரா.கி.பேட்டை ஒன்றியம்,
TN டிஜிட்டல் டீம்,
திருவள்ளூர் மாவட்டம்.

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H