புதுக்கோட்டை,ஜீன்.30: புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக
திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.சாந்தி கூடுதல் பொறுப்பு
ஏற்றுக் கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக இரா.வனஜா 2018 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி முதல் பணிபுரிந்து வந்தார். தற்போது 58 வயது பூர்த்தி அடைந்து விட்டதால் ஜீன் 30 ஆம் தேதி ஒய்வு பெற்றார்.
எனவே புதியதாக கூடுதல் பொறுப்பேற்றுள்ள திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர் செ.சாந்தி அவர்களிடம் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர் இரா.வனஜா பொறுப்பை ஒப்படைத்தார்.அவரும் பொறுப்பினை ஏற்றுக்
கொண்டார்.புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக இரா.வனஜா 2018 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி முதல் பணிபுரிந்து வந்தார். தற்போது 58 வயது பூர்த்தி அடைந்து விட்டதால் ஜீன் 30 ஆம் தேதி ஒய்வு பெற்றார்.
நிகழ்வின் போது புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.ராகவன்,இலுப்பூர்
மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) இரா.சிவக்குமார் அறந்தாங்கி மாவட்டக்
கல்வி அலுவலர் கு.திராவிடச் செல்வம்,ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாவட்ட
உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல்,ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின்
உதவித் திட்ட அலுவலர் இரவிச்சந்திரன் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் ஜீவானந்தம்,கபிலன்,பள்ளி துணை ஆய்வாளர்கள்
வேலுச்சாமி,ஜெயராமன்,செல்வம் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்கள்
,ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
மற்றும் அலுவலக பணியாளர்கள் மற்றும் கல்வி தொலைக்காட்சி மாவட்ட ஊடக
ஒருங்கிணைப்பாளர் கு.முனியசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.