இதைத்தான் சர்க்கரை நோய் என்கிறார்கள் ! இது மிக நீளமான , மிகவும் பயனுள்ள பதிவு - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


இதைத்தான் சர்க்கரை நோய் என்கிறார்கள் ! இது மிக நீளமான , மிகவும் பயனுள்ள பதிவு

அனைவரும் அலோபதி மயக்கத்தில் முழ்கி இருக்கும் இந்த நாட்டில், நம் மரபு மருத்துவத்தை தேடி வந்த உங்கள் அனைவருக்கும் என் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.

இன்று நாம் அனைவரும் கூடியிருப்பது சர்க்கரை நோய் என்று சொல்லப்படும் நீரிழிவு பிரச்சனையை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளவே.

முதலில் நம் உடல் எதனால் உருவானது என்று பார்போம்.

நமது உடல் பல லட்சம் கோடிக்கனக்கான செல்களால் ஆனது. ஒவ்வொறு செல்களுக்கும் அறிவு இருக்கிறது. இதன் முக்கிய வேலை நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உட்கிரகித்து, கழிவுகளை  வெளியேற்றவது. உட்கிரகித்தல், வெளியேற்றுதல் இதன் முக்கிய வேலை.

உதாரணத்திற்கு ஒரு மண் பொம்மையை காட்டி, தலையை சுட்டிக்காட்டி இது என்ன என்று கேட்டால், தலை என்பீர்கள். கால்களை சுட்டிக்காட்டி இது என்ன என்று கேட்டால், கால் என்பீர்கள். இந்த இரண்டு பகுதியையும் கையால் நசுக்கி பொடித்தால் அங்கு என்ன இருக்கும் ?...... எண்ணில் அடங்கா சிறு, சிறு மண் துகள்கள் மட்டுமே இருக்கும் அல்லவா.

இது போல் தான் நம் உடலும் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பல லட்சம் கோடிக்கணக்கான செல்களால் ஆனது.

இப்பொழுது உடல் எப்படி இயங்குகிறது என்று பார்ப்போம்.

பொதுவாக ஒரு பொருள் இயங்க வேண்டும் என்றால் என்ன வேண்டும் ?..... ம் சொல்லுங்க. ஏதாவது ஒரு எரிபொருள் வேண்டும் அல்லவா.

உதாரணத்திற்கு வாகனங்கள் இயங்க வேண்டும் என்றால், பெட்ரோல் என்கிற எரிப்பொருள் வேண்டும். மின் சாதனம் இயங்க வேண்டும் என்றால் ?... மின்சாரம் வேண்டும்.

இது போல் நமது உடல் இயங்க வேண்டும் என்றால் என்ன வேண்டும் ? நமது உடலுக்கு எது எரிபொருள் ? உணவு வேண்டும்ங்க. சரி அந்த உணவு செரிமானத்தின் கடைசியில் என்ன வாக மாறுகிறது ? நாம் உண்ணும் மாவுச்சத்து அனைத்தும் சர்க்கரையாக மாறுகிறது. சர்க்கரை என்பது நாம் பயன்படுத்தும் இனிப்பல்ல இது ஒரு சத்துப்பொருள்.

நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் இந்த சர்க்கரை எனும் சத்துப்பொருள் செல்கள் உட்கிரகித்து, எரித்து வெப்ப சக்தி வழங்குகிறது.

இந்த வெப்ப சக்தியால் தான் நாம் இயங்குகிறோம்.

இப்ப சொல்லுங்க நாம் இயங்குவதற்கு என்ன வேண்டும் ?...... சர்க்கரை எனும் சத்துப்பொருள் வேணுமுங்க.  சரியா சொன்னிங்க.

ஒரு பெரியவர் படுத்த படுக்கையாக இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் உடலை தொட்டுப்பார்த்தால் எப்படி இருக்கும் ?... உடல் சூடாக இருக்கும். அடுத்தநாள் இயற்கை எயதி விட்டார், இப்பொழுது உடலை தொட்டுப்பார்த்தால் எப்படி இருக்கும்?... உடல் ஐஸ் போல் இருக்கும்.

உயிரோடு இருக்கும் போது உடலில் என்ன இருந்தது ?... வெப்பம் இருந்தது. உயிர் இல்லாத போது உடலில் என்ன இல்லை ?... வெப்பம் இல்லை.

இப்பொழுது சொல்லுங்க உயிரோடு இருக்க வேண்டும் என்றால் என்ன வேண்டும் ?.... வெப்பம் வேணுமுங்கோ. வெப்பம் சக்தி எப்படி நமக்கு கிடைக்கிறது ?... உணவில் உள்ள சர்க்கரை (மாவுச்சத்து) செல்களால் எரிக்கப்பட்டு வெப்ப சத்தி கிடைக்குதுங்க.

இப்ப சொல்லுங்க, நாம உயிரோட இருக்கனும் நா என்ன வேண்டும் ?... சர்க்கரை வேணும் ங்க. சரியா சென்னிங்க. இவருக்கு எல்லோரும் கை தட்டுங்க.

பாருங்கள் மக்களே. நாம் உயிரோடு இருக்க தேவைப்படும் ஒரு அதிஅவசிய சர்க்கரை என்னும் சத்துப்பொருளால் நமக்கு நோய் ஏற்படுகிறது என்கிறார்களே, இதுவே இவர்களின் உச்சகட்ட கொடூர மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.

இது வரைக்கும் உடல் எதனால் ஆனது., எப்படி இயங்குகிறதென்று பார்தோம்.

இப்பொழுது செரிமானத்தை பற்றி பார்போம்.

நாம் உண்ணும் உணவு வாயில் உமிழ் நீருடன் கலந்தவுடன் செரிமானம் ஆக துவங்கிவிடுகிறது, பின் வயிற்றில் அமிலத்துடன் கலந்து செரிக்கப்பட்டு, சிறுகுடலுக்கு செல்கிறது இங்கு பித்த பையில் இருந்து வரும் பித்த நீரால் செரிக்கப்படுகிறது. பின் இந்த செரிக்கப்பட்ட உணவுக்கூழில்  உள்ள சத்துக்கள் சிறுகுடலின் கடைசிப்பகுதியில் இரத்ததில் கலக்கிறது. பின் கழிவுகள் பொருங்குடலுக்கு சென்று வெளியேற்றப்படுகிறது.

வாய், வயிறு, சிறுகுடலில் செரிமானம் சரியாக நடந்தால், இரத்தத்தில் கலந்த சத்துப்பொருட்கள் தரமான சத்துப்பொருட்களாக இருக்கும். செரிமானம் சரி இல்லை என்றால். சத்துப்பொருட்கள் தரமற்றவையாக இருக்கும்.

பொதுவாகவே நமது உடலுக்கு நன்மையை ஏற்றுக்கொள்ளும் திறனும். தீமையை வெளியேற்றும் திறனும் இயல்பாவே இருக்கிறது.

எப்படி என்று கேட்கிறீர்களா ? இதோ செயல் முறை விளக்கம்.

இப்பொழுது நீங்கள் பசி யோடு இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நான் உங்களுக்கு மிகவும் பிடித்த உணவை உங்கள் கண் முன்னே கொண்டு வந்து காட்டிச்செல்கிறேன். இப்பொழுது வாயில் என்ன மாற்றம் நிகழும் ?.... ஐய்யா எச்சில் ஊறுகிறது. ம் சரி.
அதே உணவை உங்கள் கண் முன்னே கீழே போட்டு மிதித்துவிட்டேன், அதை அப்படியே தட்டில் எடுத்து வைத்து மீண்டும் உங்கள் அருகில் கொண்டு வந்து காட்டிச்செல்கிறேன். இப்பொழுது எப்படி இருக்கும் ? உமிழ் நீர் சுரக்குமா ?.... சுரக்கவில்லைங்க, கொமட்டீட்டு தான் வருகிறது.

இவ்வளவுதாங்க விடையமே. நல்லதிற்கு நமது உடல் உமிழ் நீர் சுரந்து ஏற்றுக்கொள்கிறது. கெட்டதற்கு உமிழ் நீர் சுரக்காமல் ஏற்க மறுக்கிறது.

நமது உடலில் பல சுரபு உறுப்புகள் இருக்கின்றன. உமிழ் நீர் சுரபிகள், தைய்ராய்டு, தைமஸ், கணையம் போன்ற பல சுரப்புறுப்புக்கள் இருக்கிறது.

இதே போல் தான் கணையமும். இரத்தத்தில் இருக்கும் நல்ல சர்க்கரைக்கு இன்சுலின் சுரக்கிறது கெட்ட சர்க்கரைக்கு இன்சுலின் சுரப்பதில்லை.

எது நல்லது, எது கெட்டது. முன்னால் பார்த்தோம் அல்லவா. செரிமானம் சரியாக இருந்தால் இரத்தத்தில் கலக்கும் சத்துப்பொருள் தரமானதாக இருக்கும் எனவும். செரிமானம் சரி இல்லை என்றால் தரமற்றவையாக இருக்கும்.

தரமான சர்க்கரையை, நல்ல சர்க்கரை என்றும். தரம் குறைந்த சர்க்கரை கெட்ட சர்க்கரை, என்றும் வைத்துக்கொள்வோம்.

நமது உடல் என்ன செய்யும் என்று செயல் விளக்கத்தோடு பார்தோம் ? நல்லதை ஏற்றுக்கொள்ளும், கெட்டதை வெளியேற்றும்.

அதேப்போல் தான் நல்ல சர்க்கரை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. கெட்ட சர்க்கரை சிறுநீரகம் மூலம் வெளியேற்றப்படுகிறது.

சரி. நாம் இப்பொழுது உண்கிறோம். என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.

உணவு வாயில் போட்டவுடன் உமிழ் நீர் கலந்து செரிமானம் வேலை ஆரம்பமாகிறது. பின் உணவு வயிற்றுக்கு செல்கிறது இங்கு அமிலம் மற்றும் பல செரிமான நீர்களுடன் கலந்து செரிமானம் ஆகிறது. பின் சிறுகுடலுக்கு சென்று பித்த நீர் கலந்து செரிமானம் ஆகிறது. சிறுகுடல் இறுதியில் சத்துப்பொருட்கள் இரத்தத்தில் கலக்கிறது.

நீங்கள் உண்ட உணவு அறைகுறையாக செரிமானம் ஆகி உள்ளது என்று வைத்துக்கொள்வோம். எனவே பாதி தரமான சத்துப்பொருளும், பாதி தரம் குறைந்த சத்துப் பொருளும் கிடைக்கிறது. இவை அனைத்தும் இரத்தத்தில் கலந்தாச்சு.

உதாரணத்திற்கு 100 சர்க்கரை கிடைத்துள்ளது என்று வைத்துக்கொள்வோம். இதில் 50 நல்ல சர்க்கரை, 50 கெட்ட சர்க்கரை. இது அனைத்தும் இரத்தில் ஒடிக்கொண்டிருக்கிறது. கணையம் அருகே வரும் போது. கணையம் ஒவ்வொறு சர்க்கரையாக பரிசோதனை செய்து பார்க்கும். இவை தரமானதா, தரமற்றதா. உடலுக்கு நன்மை செய்யக்கூடியதா, தீமை செய்யக்கூடியதா என்று பரிசோதித்து, நல்ல சர்க்கரைக்கு மட்டும் இன்சுலின் வழங்கும், ஒரு கெட்ட சர்க்கரைக்கும் கூட இன்சுலின்  வழங்காது.

நாம் முன்னே செயல் விளக்கத்தோடு பார்த்தோம் அல்லவா. உடல் நல்ல உணவிற்கு உழிழ் நீர் சுரந்தது, கெட்ட உணவிற்கு சுரக்கவில்லை. இதேதான் இங்கேயும் நடக்கிறது.

தற்போது இன்சுலினுடன் 50 சர்க்கரையும், இன்சுலின் இல்லாமல் 50 சர்க்கரையும் இரத்தத்தில் ஒடிக்கொண்டிருக்கிறது. செல்கள் இன்சுலின் உள்ள சர்க்கரைக்கு மட்டுமே கதவை திறக்கும். இந்த 50 நல்ல சர்க்கரையும் செல்களுக்குள்ளே போய்விடும். பின் இது எரிக்கப்பட்டு வெப்ப சத்தி நமக்கு கிடைக்கிறது. இந்த சத்தி மூலமே நாம் இயங்குகிறோம்.  இன்சுலின் இல்லாத சர்க்கரையை சிறுநீரகம் கண்டறிந்து சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடுகிறது. உடலே நல்லதை, கெட்டதை கண்டறிந்து என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துவிட்டது. நாம் இப்பொழுது ஆரோக்கியமாக இருப்போம்.

நீங்கள் செய்யும் வேலைக்கு 30 சர்க்கரை போதும் என்று வைத்துக்கொள்வோம். மீதம் உள்ள 20 நல்ல சர்க்கரையை உடல் என்ன செய்யும் ?... உதாரணத்திற்கு நமக்கு தேவையைவிட பணம் அதிகம் இருந்தால் என்ன செய்வோம், சேமித்து வைப்போம் அல்லவா. அது போல் தான் உடல் தேவைக்கு அதிகமாக இருக்கும் சர்க்கரையை கூட்டு சர்க்கரையாக (Glycogen) செரிவூட்டி கல்லீரல், தசைநார்களில் சேமித்துவைத்துக்கொள்கிறது.

இந்த சேமிக்கப்பட்ட சர்க்கரை எப்போது எதற்கு பயன்படுகிறது, நாம் செய்யும் வேலைக்கு நல்ல சர்க்கரை போதவில்லை என்றால் லேசாக கிறுகிறுப்பு ஏற்பட்டு கண்கள் இருட்டடையும் போது இந்த சேமிக்கப்பட்ட சர்க்கரை இரத்தத்தில் கொட்டப்படுகிறது. நமக்கு ஏதாவது காயம் எற்பட்டால், அந்த காயத்திற்கு அருகில் இருக்கும் தசைநார்களில் சேமிக்கப்பட்ட சர்க்கரை அங்கு இருக்கும் செல்களை புதுப்பித்து காயத்தை ஆற்ற பயன்படுத்தபடுகிறது. நமக்கு எங்காவது விபத்து ஏற்பட்டு ரோட்டில் கிடந்தால், உறுப்புகள் சீராக இயங்குவதற்காக சேமிக்கப்பட்ட சர்க்கரை இரத்தத்தில் கொட்டப்பட்டு நமது உயிரை காக்க பயன்படுகிறது.

நாம் எப்படி நமக்கு பணம் இல்லாத போது சேமித்த பணத்தை பயன்படுத்துகிறோமோ. அது போல் நமது உடல் ஆபத்து காலங்களில் சேமிக்கப்பட்ட சர்க்கரையை பயன்படுத்துகிறது.

இப்ப சொல்லுங்க மனிதனுக்கு எது உண்மையான சொத்து ?... பணம் காசு வீடு, வாகனமா ? நிச்சயம் கிடையாது. நாம் சேமித்த சர்க்கரையே நமக்கு உண்மையான சொத்து.

எவர் வந்தாலும் வராவிட்டாலும். எது இருந்தாலும் இல்லாவிட்டாலும். இறுதியில், இந்த சர்க்கரையே உங்கள் கூட இருந்து உயிரை காக்கும். நாம் எதற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இப்பொழுது நமது உடல், நல்ல சர்க்கரை, கெட்ட சர்க்கரை, அதிகப்படியான நல்ல சர்க்கரைகளை எப்படி கையாள்கிறது என்று பார்தோம். இது மனிதன் தோன்றிய காலம் முதல் நடந்து வரும் இயற்கை நிகழ்வு.

இந்த மாவுச்சத்து பொருளுக்கு எவன் சர்க்கரை என்று பெயர் வைத்தான் என்று தெரியவில்லை. இது நம்மை குழப்புவதற்காக சூழ்ச்சி செய்து வைக்கப்பட்டுள்ளது. செரிமான கோளாறால் ஏற்படும் அதிக நீரிழிவு பிரச்சனைக்கு எவன் சர்க்கரை நோய் என்று பெயர் வைத்தான் என்று தெரியவில்லை.

நாம் உண்ணும் சர்க்கரைக்கும் (இனிப்பு) இந்த சர்க்கரை நோய் என்று சொல்லப்படும் நீரிழிவு பிரச்சனைக்கும் துளி கூட சம்மந்தம் கிடையாது.

சர்க்கரை என்பது ஒரு சுவை. அவர்கள் கூறும் சர்க்கரை (மாவுச்சத்து) என்பது ஒரு சத்து பொருள்.

மனிதனுக்கு செரிமானம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் இனிப்பு சுவை மிக மிக அவசியமானது. இனிப்பு சுவையால் மட்டுமே உங்கள் வயிற்றிற்கும், மண்ணீரலுக்கும் சக்தி வழங்க முடியும்.

இலை போட்டு முதலில் இனிப்பு வைத்தவன் எல்லாம் முட்டாள்

வீட்டு தின்னையில் வழிப்போக்கர்களுக்கு ஒரு மூடி தேங்காயும் ஒரு உருண்டை கருப்பட்டி வைத்தவன் எல்லாம் முட்டாள்.

விழா காலங்களில் இனிப்பு பண்டம் செய்து உண்டவன் எல்லாம் முட்டாள்.

இனிப்பை சாப்பிடக்கூடாது என்று சொல்லும் ஆங்கில மருத்துவர்கள் அறிவாளிகள்.

எதற்கு இலையில் முதலில் இனிப்பை வைத்தார்கள் ? அனைத்து உணவையும் சாப்பிட்டுவிட்டு இறுதியில் இனிப்பை வீட்டிற்கு மூட்டைகட்டி செல்லவா !,  இனிப்பை முதலில் உண்ண வேண்டும். இனிப்பு சுவை நாக்கில் பட்டவுடன் மின்காந்த அலையாக மாறி நேரடியாக வயிற்றிற்கும், மண்ணீரலுக்கும் சக்தியை வழங்குகிறது. பின் நாம் என்ன சாப்பிட்டாலும் அது நன்கு செரிமானம் ஆகி நல்ல சத்துக்களாக இரத்தத்தில் கலக்கிறது.

உங்கள் மருத்துவர் என்ன சொல்லுவார் இனிப்பு சாப்பிடக்கூடாது. இனிப்பு சாப்பிடாவிட்டால் வயிறு, இதற்கு சக்தி வழங்கும் மண்ணீரலுக்கு சத்தி கிடைக்காது. இப்பொழுது உணவு உண்டால் செரிமானம் எப்படி இருக்கும் ? அறைகுறையாக. கிடைக்கும் சத்துப்பொருட்கள் பெரும்பாலும் கெட்ட சத்துப்பொருளாகவே இருக்கும். இவைகளை உடல் என்ன செய்யும் சிறுநீர் மூலம் வெளியேற்றிவிடும். நாம் எப்படி இருப்போம் சோர்வுடன் நோயாளியாகவே இருப்போம்.

நம்மை நோயாளியாக்கி சாகடிப்பதற்காக இவர்கள் செய்த முதல் தந்திரம். மாவுச்சத்திற்கு சர்க்கரை என்று பெயர் வைத்தது, இனிப்பு சாப்பிடக்கூடாது என்று சொன்னது.

இனிப்பை சாப்பிடக்கூடாது என்று செரிமானத்தை கெடுத்ததோட விட்டார்களா ! இல்லை.

இவர்களின் அடுத்த கட்ட கொலைகார செயல்களை பார்போம்.

இப்பொழுது உங்களுக்கு அதிக நீரிழவு, தாகம், சோர்வு, அதிக பசி. ஏற்படுகிறது இவை அனைத்திற்கும் என்ன காரணம்? அரைகுறை செரிமானத்தால் இரத்தத்தில் கலந்த கெட்ட சத்துப்பொருட்கள் வெளியேறுவதே காரணம். நீங்கள் என்ன செய்ய வேண்டும் ? செரிமானம் சரியாக என்ன வழிவகையோ அதை செய்ய வேண்டும். செரிமானத்தை சரி செய்தால் மேலே குறிப்பிட்ட அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.

ஆனால் நீங்கள் என்ன செய்வீர்கள்,  உங்கள் அருகில் உள்ள மேதாவி உனக்கு சர்க்கரை நோய் இருக்கக்கூடும் போய் பரிசோதித்துக்கொள் என்பார். நீங்களும் பரிசேதனை செய்து பார்க்க போவீர்கள். அங்கு எவன் எப்பொழுது மாட்டுவன் எப்படியெல்லாம் அவன் தலையில் மிளகாய் அரைக்கலாம் என்று 5 வருடம் படித்துவிட்டு வெள்ளை கோர்ட்டு போட்டு கழுத்தில் பாசக்கயிறை மாட்டிக்கொண்டு ஒரு பூதம் உட்காந்திருக்கும். உங்கள் இரத்தத்தை பரிசோதனை செய்து பார்த்து, உங்களுக்கு சர்க்கரை அதிகம் உள்ளது. நீங்கள் சர்க்கரை நோயின் ஆரம்பகட்டத்தில் உள்ளீர்கள் என்பார்கள். இதில் என்ன பரிதாபமான விடையம் என்றால். நல்ல மற்றும் கெட்ட சர்க்கரை இரண்டிற்கும் இவர்களுக்கு வித்தியாசம் தெரியாது, இரண்டுமே சேர்த்துதான் இவர்களால் சொல்ல முடியும்.

அந்த சர்க்கரை நல்ல சர்க்கரையா, கெட்ட சர்க்கரையா ? கணையம் பரிசோதித்து இன்சுலின் வழங்கப்பட்டுவிட்டதா இல்லையா ? சர்க்கரை செல்களுக்குள் சென்று எரிக்கப்பட்டுவிட்டதா ? சிறுநீரகத்தால் கெட்ட சர்க்கரை கண்டரிந்து வெளியேற்றப்பட்டுவிட்டதா அல்லது வேலை நடந்து கொண்டிருக்கிறதா ? அதிக நல்ல சர்க்கரை தசைநார்களில் சேமிக்கப்பட்டுவிட்டதா, இல்லை சேமிப்பு வேலை நடந்து வருகிறதா ? நீங்கள் செய்யும் வேலைக்கு சர்க்கரை போதுமானதா இல்லையா என்று எதுவும் அந்த அப்பாவி Robotic மருத்துவர்களுக்கு தெரியாது. இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அளவுகளை பார்த்து மாத்திரை கொடுப்பது மட்டுமே.

நல்ல சர்க்கரைக்கும், கெட்ட சர்க்கரைக்கும் இயந்திரங்களுக்கு வித்தியாசம் தெரியாது. இரண்டிற்கும் ஒரே Chemical formula வைத்தான் காட்டும், Glucose - C6H12O6. இதோ உதாரணம் அடிக்கரும்பு எப்படி இருக்கும் ?... நன்கு இனிப்பு சுவை உடையதாக இருக்கும் ங்க. சரி நுனிக் கரும்பு எப்படி இருக்கும் ?...
இனிப்பு குறைவாக சல்லென்று இருக்கும். இந்து அடிக்கரும்பையும், நுனிக்கரும்பையும் ஒரு Lab ல் கொடுத்து பரிசோதனை செய்யது பாருங்கள் Sucrose - C12H22O11 என்று ஒரே Chemical formula வைதான் காட்டும். எப்படி நமக்கு சுவையில் வித்தியாசம் தெரிந்து இயந்திரத்திற்கு தெரியவில்லையோ, அதேப்போல்தான் தரமான சர்க்கரைக்கும்( நல்ல )மற்றும் தரமற்ற சர்க்கரைக்கும் (கெட்ட) உடலுக்கு வித்தியாசம் தொரியும், இயந்திரங்களுக்கு தெரியாது.

இப்பொழுது புரிகிறதா ஏன் ஆங்கில மருத்துவத்திற்கு நல்ல மற்றும் கெட்ட சர்க்கரைக்கு வித்தியாசம் தெரியவில்லை என்று. இவர்கள் தன் சொந்த மூலையை விட மனிதன் உருவாக்கிய இயந்திரத்தை மட்டுமே நம்புவார்கள்.

சரி, இப்பொழுது நீங்கள் சர்க்கரை நோயாளி என்று முத்திரை குத்தப்பட்டுவிட்டார்கள். மாத்திரை எழுதி கொடுத்துவிட்டார்கள்.

இவர் எந்த அளவை வைத்து உங்களை சர்க்கரை நோயாளி என்று முடிவு செய்தார் ? யார் அளவை நிர்ணயம் செய்தது ? இந்த சர்க்கரை மாத்திரை எதற்கு கண்டுபிடிக்கப்பட்து ? உண்மையில் ஆரோக்கியத்திற்கு அளவு ஏதும் உண்டா ? என்று பார்ப்போம்.

ஆங்கில மருத்துவம் அறுவைசிகிச்சை செய்யத்துவங்கும் காலகட்டத்தில், இரத்த போக்கு அதிகம் ஏற்பட்டு உயிரிழப்பு அதிகம் ஏற்பட்டது. அறுவை சிகிச்சையின் போது ஒரு மாத்திரை கொடுக்கப்பட்டு அறுவைசிகிச்சை செய்துபார்த்தார்கள். இது அவர்களுக்கு வெற்றியாக அமைந்து. அறுவை சிகிச்சையின் போது மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த இந்த மாத்திரையை எப்படி உலகம் முழுவதும் வியாபாரம் செய்து கோடிகோடியாய் பணம் சம்பாதிப்பது என்று இரவு பகலாக ஆங்கில மருத்துவ உலகம், மருந்து மாத்திரை பெருநிறுவனங்கள் இணைந்து ஆலோசனை செய்து ஒரு முடிவிற்கு வந்தார்கள். அந்த முடிவு என்ன ?

சர்க்கரைக்கு அவர்களே ஒரு அளவை நிர்ணயித்து, இதற்கு மேல் சென்றாலும் நோய், கீழ் சென்றாலும் நோய் என்று பொய் பிரச்சாரம் செய்வதென முடிவெடுத்தார்கள்.

இதன் படி உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் மாட்டுவர்கள். இவர்களிடம் மாத்திரை விற்பனை செய்து கோடி கோடியாய் சம்பாதிக்கலாம் என்பதே இவர்களின் இலக்கு.

இந்த வியாபாரிகள் விரித்த வலையில் தான் நீங்கள் இப்போது சிக்கி உள்ளீர்கள்.

உண்மை என்னவென்றால் சர்க்கரை இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. சர்க்கரையை பரிசோதித்து பார்பதே மிகப்பெரிய முட்டாள்தனம்.

ஒரு மனிதன், அவர் வாழும் பகுதி, அவர்கள் பண்பாடு, கலாச்சாரம், அவர் செய்யும் வேலை ( உடல் உழைப்பு), மன நிலை, உணவு, சுற்றுச்சூழல், நீர், செரிமாண மண்டலத்தின் சக்தி, பிராண சக்தி இவைகளை பொருத்து சர்க்கரையின் அளவு ஒவ்வொருவருக்கும் மாறிக்கொண்டே இருப்பது தான் இயற்கை.

உண்மை இப்படி இருக்கும் போது, எதன் அடிப்படையில் உலகம் முழுவதும் அனைத்து மனிதர்களுக்கும், இவர்களால் ஒரே அளவை நிர்ணயம் செய்ய முடிகிறது. இதை வைத்தே தெரியவில்லையா ?.... இவர்களின் நோக்கம் உலக மக்களை நோயாளிகளாக்கி,  அவர்களின் செவ்வம் மற்றும் ஆரோக்கியத்தை சுரண்டும் கொடூர பாவச்செயல்களை செய்கிறார்கள் என்று.

நீங்கள் என்ன செய்தீர்கள், மாத்திரை டப்பாவை வாங்கி வீட்டிற்கு வந்துவிட்டீர்கள். இப்பொழுது உணவெடுக்கிறீர்கள். செரிமானம் அறைகுரையாக இருக்கிறது. இதனால் 70 கெட்ட சர்க்கரையும், 30 நல்ல சர்க்கரையும் இரத்தத்தில் கலக்கிறது என்ற வைத்துக்கொள்வோம். உடல் என்ன செய்யும் 70 கெட்ட சர்க்கரையை கண்டரிந்து சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும். 30 நல்ல சர்க்கரை செல்களுக்குள் சென்றுவிடும்.

இப்பொழுது மாத்திரை சாப்பிடுகிறீர்கள். இது என்ன செய்யும் நேரடியாக கணையத்திடம் சண்டையிட்டு 70 கெட்ட சர்க்கரைக்கும் இன்சுலின் வாங்கி கொடுக்கும் கொடூர செயலை செய்யும், இந்த 70 கெட்ட சர்க்கரையும் இன்சுலினுடன் இரத்தத்தில் சுற்றிக்கொண்டிருக்கும். செல்கள் இன்சுலின் இருப்பதால் கதவை திறந்து ஏற்றுக்கொள்ளும். இந்த கெட்ட சர்க்கரையை செல்களால் சரியாக எரிக்கப்பட்டு வெப்ப சக்தியாக மாற்ற முடியாது. எனவே முதல் முதலில் உங்கள் செல்களில் கழிவு தங்குகிறது.

உதாரணத்திற்கு நல்ல சர்க்கரையை வெயிலில் நன்கு காய்ந்த விறகாக கற்பனை செய்துகொள்ளுங்கள். கெட்ட சர்க்கரையை காயாத ஈர விறகாக கற்பனை செய்துகொள்ளுங்கள். செல்களை அடுப்புகளாக கற்பனை செய்துகொள்ளுங்கள்.

அடுப்பின் வேலை என்ன?.. விறகை எரித்து வெப்ப சக்தி வழங்குவது. செல்களின் முக்கிய வேலை என்ன?.. சர்க்கரையை எரித்து வெப்ப சக்தி வழங்குவது. நன்கு காய்ந்த விறகை அடுப்பில் எரித்தால் அங்கு என்ன மிச்சம் இருக்கும் ?... சிறிது சாம்பல் மட்டுமே. வெப்ப சக்தியும் முழுமையாக கிடைத்துவிடும். ஈர விறகை எரித்தால் என்ன நடக்கும் ?... சரியாக எரியாமல் புகைந்து புகைந்து விறகு அடுப்பில் தங்கிவிடும். சரியாக வெப்ப சக்தியும் கிடைக்காது. இது போல் தான் நம் செல்களும் கெட்ட சர்க்கரையை முழுமையாக எரிக்க முடியாமல் கழிவு செல்களில் தங்கிவிடுகிறது.

உலகத்தில் உள்ள அனைத்து நோய்களுக்கும் ஒரே காரணம்தான். அது என்ன ? இயற்கை விதிமீறல் செயல்களால் கழிவுகள் நமக்குள் தங்குவதே காரணம். கழிவு தேக்கம் நோய். கழிவு நீக்கம் குணம்.

உடல் சரியாக கெட்ட சர்க்கரையை கண்டரிந்து சிறுநீர் மூலம் வெளியேற்றிய தரமற்ற சர்க்கரையை நாம் சொந்த செலவில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு செல்களுக்குள்ளையே செலுத்துவதுதான் உங்கள் அறிவியலின் உச்சகட்ட அற்புத செயல்.

சாக்கடைக்கு செல்ல வேண்டிய ஒரு தேவையற்ற பொருளை, நாம் செல்களுக்குளே செலுத்துவதால் கழிவுகள் செல்களில் தங்கி அந்த செல் பாதிக்கிறது. இத தொடர்ந்து நடக்கும் போது. அந்து உறுப்பு பாதிக்கிப்படுகிறது. உறுப்புகள் பாதிக்கப்பட்டால் அதன் வேலையை சரியாக செய்ய முடியாது. இதனால் மேலும் கழிவுகள் உள்ளேயே தங்க, சொல்லிலடங்கா துயரங்களுக்கு ஆளாகுகிறோம்.

இப்பொழுது தெரிகிறதா சர்க்கரை நோய் வந்தால் ஏன் எல்லா நோய்களும் வருகிறதென்று. சர்க்கரை நோய் என்னும் நீரிழிவு பிரச்சனை வந்தால் எந்த நோயும் வராது. இதற்கு மாத்திரை அல்லது இன்சுலின் ஊசி போடுவதின் மூலமே அனைத்து நோய்களும் வருகிறது.

சாதாரணமாக உள்ள செரிமானப்பிரச்சனையை சரி செய்திருந்தால் உங்கள் அனைத்து பிரச்சனையும் சரியாகியிருக்கும் அதைவிட்டுவிட்டு, பன்னாட்டு வியாபாரிகளின் கொடிய விசப் பொருட்களை துளி கூட சிந்திக்காமல், அப்படியே நாம் ஏற்றுக்கொண்டதால் உணர்ச்சியற்ற நோய் பிண்டங்களாக காட்சியளிக்கிறோம்.

நீரிழிவு காரணங்கள் !

சர்க்கரை நோய் என்னும் நீரிழிவு பிரச்சனைக்கு மூன்றே காரணம்தான். அனைத்து நீரிழிவு நோயாளிகளும் இதில் அடங்குவார்கள்.

1 - அதிக கவலை
2 - அவசரமாக சாப்பிடுவது
3 - அதிக உடல் வெப்பம்

சர்க்கரை நோயாளி என்னு சொல்லப்படும் செரிமானக் கோளாறு உள்ளவர்கள் அனைவருக்கும் இதில் ஒரு காரணமாவது நிச்சயம் பொருந்தும். பரிசோதித்து பாருங்கள். என்னங்க நான் சொன்னது சரியா... !

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H