
பழங்கள்,காய்கறிகள் போன்றவற்றோடு தானியமும், பயறு வகைகளும் பச்சையாக
எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. தானியங்களும் பயறு வகைகளும் உணவு
பொருள்களில் தலைவன் தலைவி போன்று சொல்லலாம். தானியங்கள் புரதச் சத்தையும்,
கார்போஹைட்ரேட்டும் கொண்டிருந்தால் அரிசியில் இருக்கும் புரதச்சத்தை பயறு
வகைகள் கொண்டிருக்கின்றன.
பயறுகளில் பல வகை இருந்தாலும் முக்கியமானவை முதன்மையானவையாக கருதப்படுவது
பச்சைபயறு. இதில் புரதச்சத்தும் இரும்புச்சத்தும் அதிகமிருக்கின்றன.
இரும்புச்சத்து குறைபாடு இருப்பவர்கள் அடிக்கடி பச்சைப்பயறு சேர்த்து
வந்தால் இரும்புச்சத்து மாத்திரைகள் எடுக்க வேண் டிய அவசியம் இருக்காது.
உடல் சூட்டை தணித்து உடலில் குளிர்ச்சியை உண்டாக்குகிறது. சரும புற்றுநோய்
வராமல் தடுக்கிறது. சருமத்தை பொலிவாக்க செய்கிறது. மேலும் கூந்தல்
பிரச்னையால் அவதியுறுவர்களுக்கு இது நல்ல தீர்வு. பச்சைபயறு மாவை பாலில்
கலந்து முகத்தில் தேய்த்து குளித்து வந்தால் சருமம் மினுமினுப்பைக்
கொடுக்கும். இரத்த அழுத்தம், கொழுப்பு போன்ற பாதிப்புகளைக் கட்டுப்படுத்த
உதவுகிறது. பயறுகள் கொழுப்புச்சத்து குறைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளைத் தடுப்பதில் முக்கிய பங்கு
வகிக்கின்றது. ஆய்வுகளும் இதை உறுதி செய்திருக்கிறது.