வாழ்க்கை எல்லோருக்கும் ஒன்று தான். ஆனால் நாம் வாழும் முறையில் தான் நமது வாழ்க்கையின் அர்த்தம் அடங்கியிருக்கிறது.
வாழ்க்கையை ரசனையாக வாழவும், நினைத்த செயல்களை செய்து முடிக்க எளிய விதிகள்..
சின்னச் சின்ன செயல்களை எடுத்துக் கொள்ளுங்கள். நீண்டகால இலக்காக, உங்களின் லட்சியங்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.
குறைந்த காலத் திட்டங்களை அதற்குரிய கால இடைவெளிகளில் செய்து முடித்து விட்டோமா? என சுயபரிசோதனை செய்து கொண்டால், அடுத்தமுறை அதற்கேற்றபடி திட்டமிடலாம்.
மோசமான செயல்களை நினைத்து வருந்துவதை விட்டுவிட்டு நிகழ்காலத்தில் மகிச்சியுடன் இருங்கள். வாழ்க்கையை ரசனையாக வாழவும், நினைத்த செயல்களை செய்து முடிக்க எளிய விதிகள்..
சின்னச் சின்ன செயல்களை எடுத்துக் கொள்ளுங்கள். நீண்டகால இலக்காக, உங்களின் லட்சியங்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.
குறைந்த காலத் திட்டங்களை அதற்குரிய கால இடைவெளிகளில் செய்து முடித்து விட்டோமா? என சுயபரிசோதனை செய்து கொண்டால், அடுத்தமுறை அதற்கேற்றபடி திட்டமிடலாம்.
நாம் என்ன செய்தாலும், கடந்த காலத்தை மாற்ற முடியாதே? பின்னர் ஏன் அதை நினைத்து வருந்த வேண்டும்?
இன்றைக்கு நீங்கள் செய்யும் செயல்கள் தான் உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும். அவற்றில் மட்டும் கவனம் இருக்கட்டும். கடந்த கால அனுபவங்கள் தந்த பாடங்கள் மட்டும் போதும் நமக்கு!
நம்பிக்கையின் வெற்றியே முழுவதுமாக நம்புவதில் தான் இருக்கிறது. உங்களால் எதுவும் முடியும் என்கிற கர்வமில்லாத, முழு நம்பிக்கை மிக அவசியம்.
அனுபவமும், திறமையும் தான் இந்த துணிச்சலைத் தரும். அதனை அதிகம் ஆக்குங்கள்.
வெற்றிகளும், பொறுப்புகளும் வர வர அடக்கமும் வர வேண்டும். பணிவு தான் தலைமைப் பண்புக்கு முதல் தகுதி. அந்தப் பணிவை தலைவன் ஆனாலும் விட்டு விடாதீர்கள்.
தற்புகழ்ச்சி, சுயவிளம்பரம் இதெல்லாம் நீங்கள் நிச்சயம் வெறுக்க வேண்டியவை..
சேமிப்பும், ஒருவகையில் உங்களின் லாபம் தான். சேமிப்பும் ஒரு வருமானம் தான். எனவே சரியான திட்டமிடலுடன் சேமிப்பு ரொம்ப முக்கியம்.
நீங்கள் எவ்வளவு செலவு செய்தாலும், உங்களின் கடந்த ஒரு நொடியைக் கூட உங்களால் திரும்பப் பெற முடியாது. அப்படியெனில் அதன் மதிப்பு எவ்வளவு என யோசித்துப் பாருங்கள்.
எந்த செயலையும் நாளை என தள்ளிப் போடாமல், இன்றே முடித்து விடுங்கள். ஒரு நொடியில் நீங்கள் எடுக்கும் முடிவு கூட, மிகப் பெரிய வெற்றிகளை உங்களுக்காக வைத்துக் கொண்டு காத்திருக்கலாம்.
ஆம்.,நண்பர்களே..,
வாழ்க்கையில் எப்போதும் கற்றுக் கொண்டே இருங்கள்.
ஏனெனில்.,
வாழ்க்கை எப்போதும் கற்றுக் கொடுப்பதை நிறுத்தாது.
உலகம் தன்னை தினந்தோறும் மாற்றிக் கொண்டே இருக்கும்