பிரதமர் மோடியுடனான அனுபவம் குறித்து பியர் கிரைல்ஸ் ANI செய்தி நிறுவனத்திடம் கூறுகையில்; "வனவிலங்குகள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலே ஒபாமா மற்றும் மோடியுடன் பயணம் செய்துள்ளேன். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கார்பெட் தேசியப்பூங்காவில் காட்டுக்குள் சென்றோம். இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி மிகவும் அமைதியாக இருந்தார். தைரியமாகவும் இருந்தார். அவரை அழைத்துச் சென்றது என்னுடைய பாக்கியம்.
காட்டுக்குள் பயணம் செய்யும் பொதுவாக அரசியல்வாதிகள் மிகவும் யோசிப்பர். ஆனால், பிரதமர் மோடி எந்த ஒரு பயமும் இல்லாமல் என்னுடன் பயணம் செய்தார். அவருடைய உடையில் அவர் மிகவும் அழகாக தெரிந்தார். பயணம் சற்று கடினமாகவே இருந்தது. பெரிய கற்கள், கரடு முரடான பாதைகளை கடந்து செல்ல வேண்டியிருந்தது. உலகத் தலைவர் ஒருவருடனான பயணம் மிகவும் எனக்கு பிடித்திருந்தது. பிரதமர் என்பதை மறந்து அவர் மிகவும் சாதரணமாக பயணித்தார். எப்போதுமே அவரது முகத்தில் புன்னகை இருந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது" என்று தெரிவித்துள்ளார்.
காட்டில் இருக்கும் விலங்குகளை விட ஆபத்தான பலவும் நாட்டில் இருக்கிறது. அதையே எளிதாக கையாள்கிறார்......
இதெல்லாம் அவருக்கு எம்மாத்திரம்