பாடப் புத்தகத்தில் வெளிவந்த பிழைக்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள்தான்
பொறுப்பேற்க வேண்டும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
கோபிசெட்டிபாளையம் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள், சுற்றுலாப் பயணிகளுக்காக படகு இல்லம், பூங்கா ஆகியவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 7 இடங்களில் துணை மின் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் 2 துணை மின் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. கொடிவேரி அணை சுற்றுலாத் தலத்தை மேம்படுத்தி குற்றாலத்தைப் போல் கொடிவேரியை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.