*காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்* 19-09-2019 - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Wednesday 18 September 2019

*காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்* 19-09-2019

🕴🕴🕴🕴🕴🕴🕴🕴👩‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻


*இன்றைய திருக்குறள்*

*குறள் எண்- 1028*

குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
 மானங் கருதக் கெடும்.

மு.வ உரை:

குடி உயர்வதற்கான செயல் செய்கின்றவர்க்கு உரிய காலம் என்று ஒன்று இல்லை, சோம்பல் கொண்டு தம் மானத்தைக் கருதுவாரானால் குடிப்பெருமைக் கெடும்.

கருணாநிதி  உரை:

தன்மீது நடத்தப்படும் இழிவான தாக்குதலைக் கண்டு கலங்கினாலோ, பணியாற்றக் காலம் வரட்டும் என்று சோர்வுடன் தயக்கம் காட்டினாலோ குடிமக்களின் நலன் சீர்குலைத்துவிடும்.

சாலமன் பாப்பையா உரை:

தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்ய ஆசைப்படுவர் சோம்பி, தம் பெருமையை எண்ணி இருந்தால் எல்லாம் கெட்டுப் போகும். அதனால் அவர்க்குக் கால நேரம் என்று இல்லை.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

*பொன்மொழி*

செயல்பாடில்லாத  அறிவோ பயனற்றது.
பொருத்தமற்றது. செயல்பாட்டுடன் கூடிய அறிவோ நல் வளத்தைப் பெருக்கும்.
  - அப்துல் கலாம்
♻♻♻♻♻♻♻♻

*Important  Words*

 Uniform சீருடை

 Waistcoat அரைக் கோட்டு

 Turban தலைப்பாகை

 Yarn நூல்

 Suiting சூட் துணி

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

*பழமொழி மற்றும் விளக்கம்*

*பருவத்தே பயிர்செய்*

விளக்கம் :

பருவம் என்பது குறிப்பிட்ட காலத்தைக் குறிக்கிறது. உரிய காலத்தில் எந்தச் செயலையும் செய்தல் வேண்டும். இல்லையென்றால் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. படிக்கிற பருவத்தில் செம்மையாக படிக்க வேண்டும். அதேபோல அந்தந்தப் பருவத்தில் பயிர்களை விதைத்து மழை காற்றில் வீணாகாமல் பருவத்தே அறுவடை செய்ய வேண்டும். இது போன்ற காலம் தவறாமல் செய்ய வேண்டிய கடமைகளை சரியாக செய்ய வேண்டும் என்பதையே இந்த பழமொழி உணர்த்துகிறது.

✍✍✍✍✍✍✍✍

*பொது அறிவு*

1) உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழிகளில் ஐந்தாவது இடத்தை பெற்றுள்ள மொழி?

*ஹிந்தி*

2) நிலவிற்கு மனிதனை அனுப்பிவைத்த முதல் நாடு?

*அமெரிக்கா*

📫📫📫📫📫📫📫📫

*விடுகதை*

1. ஆலமரம் தூங்க , அவனியெல்லாம் தூங்க, ஸ்ரீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை. அவன் யார்?

*மூச்சு*

2. நடு வழிய ஓய்வுக்காம், கடை இரண்டில் ஏதுமில்லை சொல். மூன்றெழுத்தில் உடுத்தலாம், மொத்தத்தில் பெண்களின் விருப்பம். அது என்ன?

*பட்டு*

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்றைய கதை*

*வளைந்த நாணல்*

ஒரு நாள் தென்றல் காற்று வீசியது. தோட்டத்திலுள்ள மரங்கள், புற்களையும், நாணலையும் பார்த்து, சிறு தென்றல் காற்று வீசியதற்கே பலமற்றுப் போய் அசைந்து கொடுக்கிறாயே? என்று ஏளனமாகப் பேசி சிரித்தன.

அடுத்தநாளே தோட்டத்தில் பலத்த சூறைக்காற்று வீசியது. சூறைக்காற்று பலமாக வீசியதால் தோட்டத்தில் இருந்த மரங்கள் ஒவ்வொன்றாக முறிந்து விழுந்தன. அப்போது நாணல், மரங்களே! நீங்களும் என்னைப் போல் வளைந்து கொடுக்கப் பழகியிருந்தால் இப்படி வேரோடு சாய்ந்திருக்க மாட்டீர்கள்!

எங்களைப் பார்த்து ஏளனமாக கேலி பேசினீர்களே! நாங்களும் உபயோகமானவர்கள் தான். நாங்கள் ஆற்றுநீர் கரையை அரிக்காமல் தடுப்பதால்தான், நீங்களெல்லாம் கம்பீரமாக நிற்க முடிகிறது. இல்லையேல் கம்பீரமாக நிற்க முடியாது. அதேபோல் உருவத்தில் சிறியதாக இருக்கும் எறும்பு, தும்பிக்கைக்குள் நுழைந்து கடித்தால் உருவத்தில் பெரிய யானையாலும் வலியை தாங்கிக் கொள்ள முடியாது என்றது.

நாணல் பேசியதை கேட்டு மரங்களால் எதுவுமே பேச முடியவில்லை. அப்போதுதான் மரங்கள் உருவத்தில் சிறியதாக இருந்த நாணலைப் பார்த்து அலட்சியமாகப் பேசியது தவறு என்பதைப் புரிந்து கொண்டன.

நீதி :

ஒருவரையும் ஏளனமாகப் பேசக்கூடாது.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
T.தென்னரசு,
இரா.கி.பேட்டை ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்.
TN டிஜிட்டல் டீம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

*செய்திச் சுருக்கம்*

🔮5 , 8 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு: தமிழகத்தில்  மூன்றாண்டுகளுக்கு விலக்கு: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.

🔮உலகிலேயே அதிகம் புலம் பெயர்ந்தோர் 1.75 கோடி இந்தியர்கள் - ஐநா அறிக்கை.

🔮வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

🔮போன் செய்தால் வீட்டுக்கே இயற்கை உரம் தேடி வரும் என்று சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

🔮2020 டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் தகுதி பெற்று உள்ளார்.

🔮விளையாட்டுஆசிய விளையாட்டு போட்டி: இந்திய குத்துச்சண்டை வீரர் அமித் பங்கல் அரையிறுதிக்கு முன்னேறினார்.

*Headlines*

🔮Rajnath Singh gives the nod for writing the history of India’s borders.

🔮Crackdown on banners turns boon for graffiti painters in Chennai.

🔮Pakistan turns down India's request to open its airspace for PM's flight to US.

🔮European parliamentarians back India on Kashmir, slam Pakistan for harbouring terrorists.

🔮Vinesh Phogat wins bronze at World Wrestling Championship, qualifies for Tokyo Olympics

🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H