Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டுமா? 7 சூப்பர் டிப்ஸ்
ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டுமா? 7 சூப்பர் டிப்ஸ்
அனைவரும் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் ஆரோக்கியமான
வாழ்வியலை கடைபிடிப்பது கடினமானது தான். ஆனால், உடல் நலத்துடன் இருக்க
ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை கடைபிடிப்பது முக்கியம். அதற்கு இந்த 7 எளிய
நடைமுறைகளை தினமும் பின்பற்ற வேண்டும்.
45 நிமிடங்களுக்கு தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்:
தினமும் உடற்பயிற்சி செய்வதற்கென 45 நிமிடங்களை ஒதுக்குங்கள். தினமும் ஒரே
நேரத்தில் தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆனால்,
தினமும் எந்த நேரத்திலாவது உடற்பயிற்சி செய்துவிட வேண்டும் என
உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். எளிமையான உடற்பயிற்சிகள் பல நோய்கள் நம்மை
அண்டாமல் காக்கச் செய்யும் தன்மை உடையது. அந்த மாதிரியான உடற்பயிற்சிகள்
நம்மை இதய நோய்கள், ஆஸ்டியோபோரோசிஸ், மன அழுத்தம், கோபம் இவற்றில் இருந்து
காக்கும். அதுமட்டுமல்லாமல் சமயத்திற்கேற்ப விழிப்புடன் இருத்தல்,
நம்பிக்கை ஆகியவற்றையும் அதிகரிக்கச் செய்யும்.
உங்களின் சிறப்புகளை மறந்து விடாதீர்கள்:
தினசரி வாழ்வில் நமக்கு பல பிரச்சினைகள் உண்டு. ஆனால், அந்த பிரச்சினைகளில்
இருந்து தப்பித்ததற்கு நாம் நன்றியுடன் இருக்க வேண்டும். உங்களின்
வாழ்க்கையில் நடந்த நேர்மறையான விஷயங்களை மறந்து விடாமல் இருப்பது
அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகளை சரிசெய்ய உதவும். உங்களை தொடர்ந்து அவை
முன்னேறச் செய்யும்.
தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள்:
உங்கள் உடல் தொடர்ந்து இயங்குவதற்கான எரிபொருளே தண்ணீர் தான். அது நன்றாக
இயங்க தண்ணீர் அவசியம். போதுமான தண்ணீர் அருந்துவதன் மூலம் உடலில் உள்ள
நஞ்சு நீங்கி, செரிமானத் தன்மை அதிகரிக்கும். தோல், முடி ஆகியவற்றின் தன்மை
மேம்படும். சமநிலையுடன் நீங்கள் இருப்பதாக உணருவீர்கள். தினமும்
குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். ஆனால், உங்களில்
வாழ்வியலை பொறுத்து இதன் அளவு அதிகரிக்கவும் செய்யலாம்.
தீய பழக்கங்களில் இருந்து விடுவித்துக் கொள்ளுங்கள்:
நாம் எல்லோரும் நம்மை பற்றி பெருமை கொள்ள முடியாதபடி சில பழக்கவழக்கங்களைக்
கொண்டிருப்போம். அந்த பழக்கத்தில் இருந்து விடுவித்துக் கொள்ள வேண்டும்
என்றும் நினைத்துக் கொண்டே இருப்போம். அந்த தீய பழக்கங்கள் உங்கள் உடல்
நலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். தவிர்த்து மனதளவிலும் பல விளைவுகளை
ஏற்படுத்தும். அந்த பழக்கங்களில் இருந்து விடுவித்துக் கொள்ள ஏதேனும் சிறிய
முயற்சியை தினமும் மேற்கொள்ளுங்கள். அது அதிக நேரம் செல்போன்
பயன்படுத்துவதாக இருக்கலாம், நொறுக்குத் தீனி உண்பதாக இருக்கலாம், எதுவாக
வேண்டுமானாலும் இருக்கலாம். அதிலிருந்து தப்பித்து உடலையும், மனதையும்
ஆரோக்கியமாக வைத்திடுங்கள்.
தினமும் நடந்தவற்றை அசைபோட்டுக் கொள்ளுங்கள்:
நமது பிஸியான வாழ்வில் தினசரி நடவடிக்கைகளை நம்மால் திரும்பிக் கூட பார்க்க
இயலாது. ஆனால், சிறிது நேரம் எடுத்து அன்றைய நாளை அசைபோட்டு பாருங்கள்.
அந்த நாளில் நீங்கள் கடந்த சவால்கள் மற்றொரு நாளில் உங்களுக்கு உதவலாம். 15
நிமிடங்கள் இதற்கென ஒதுக்குங்கள். தியானம் செய்வதன் மூலமாகவோ அல்லது
ஜன்னலின் வெளியே பார்த்துக்கொண்டே கூட இதனை செய்யலாம்; இது மன நலத்தை
மேம்படுத்தும். ரிலாக்ஸாக உணருவீர்கள்.
7-8 மணி நேர உறக்கம் தேவை:
உடலுக்கு மட்டும் உறக்கம் அவசியம் அல்ல, மனதுக்கும் ஓய்வு தேவை. எட்டு மனி
நேர தூக்கம் அவசியம். இல்லையென்றால், குறைந்தது 7 மணி நேர தூக்கமாவது
வேண்டும். இதன்மூலம், குறைந்த கால அளவிலேயே நீங்கள் ஆரோக்கியமாகவும்
மகிழ்ச்சியாகவும் உணருவீர்கள். உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை இதன்மூலம்
பெறுவீர்கள். உங்கள் மனம் மற்றும் உடல் எளிமையானதாக உணருவீர்கள்.
தினசரி உணவில் சிறிதளவு மூலிகைகளை சேர்த்துக் கொள்ளுங்கள்:
நீண்ட கால ஆரோக்கியம், பல சவால்களை உங்கள் உடல் சந்திப்பதற்கு தினசரி
உணவில் சிறிதளவு மூலிகைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். துளசி மூச்சு
சம்மந்தப்பட்ட நோய்களை குணப்படுத்த வல்லது. பிராமி எனும் ஆயுர்வேத மூலிகை
அறிவாற்றல், நினைவாற்றலை மேம்படுத்தும்.
-ஐஏஎன்எஸ்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








