பயணம் என்றால் அதற்கு ஓர் இலக்கு இருக்க வேண்டும். அதாவது நாம் எந்த இடத்தை அடைவதற்காக பயணப்படுகின்றோம் என்று தெரிந்தால் தான் அந்த இடத்தை நாம் எளிதாக அடைய முடியும்..
அது போலத்தான் வாழ்க்கையும்.. வாழ்க்கை என்றால் இலட்சியம் இருக்க வேண்டும். இலட்சியம் இல்லாத வாழ்க்கை துடுப்பில்லாத படகைப் போன்றது
அது காற்றுக்கு அசையலாம்.ஆனால் கரையைச் சென்று அடைய முடியாது..
ரயிலில் ஒரு இளைஞன் பயணம் செய்து கொண்டு இருந்தான் அவன் தன் பயணச் சீட்டை அடிக்கடி வெளியில் எடுத்துப் பார்த்துக் கொள்வது, பிறகு தன் பையில் வைத்துக் கொள்வதுமாக இருந்தான்.
இதை இவனுடன் பயணம் செய்து கொண்டு இருந்த சக பயணிகள் கவனித்துக் கொண்டு இருந்தனர்..
ஆனால் சிறிது நேரத்தில் தன் பையில் வைத்து இருந்த பயணச்சீட்டை காணாததால் அங்கேயும் இங்கேயும் தேடிப் பார்த்தான். ஆனால் எங்கும் காணவில்லை..
அப்போது மற்ற பயணிகள் அவனிடம்,’
தம்பி நீ பயணச்சீட்டு வைத்து இருந்ததை நாங்கள் அறிவோம்.. பரிசோதகர் வந்தால் நடந்தது என்னவென்று நாங்கள் சொல்கிறோம். நீ எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று அவனுக்குத் தைரியம் சொன்னார்கள்..
அதற்கு அவன் சொன்னான்,,நான் டிக்கெட் பரிசோதருக்காக நான் தேடவில்லை..அந்த டிக்கெட்டைப் பார்த்தால் தான் நான் எங்கே இறங்குவது என்று எனக்கே தெரியும் என்று சொன்னான்..
உங்களின் வாழ்வின் இலட்சியம் குறித்தும் அதை அடைவதற்கான வழிகள் குறித்தும் எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருங்கள்.
ஒவ்வொரு முறை சிந்திக்கும் போதும் மனதில் புத்துணர்வும், புதிய வழியும் தென்படத் தொடங்கும்..