TNPSC வெளியிடும் Answer key வரும் வரை அமைதி காக்கவும்.
ஒரே மதிப்பெண்ணில் குறைந்தது ஆயிரம் நபர்கள்கூட இருப்பார்கள். அதனால் அதிக நம்பிக்கை வேண்டாம்.
பொறுமையுடன் இருங்கள். Cut-off என்ன என்ன? என்று தேவை இல்லாமல் நேரத்தை வீணடிக்காமல் அடுத்த தேர்வுக்கு படிக்கச் தொடங்கவும்.
அடுத்த தேர்வு கண்டிப்பாக கடினமாக இருக்கும் (GROUP II / GROUP II-A)
என் பார்வையில் 190 எடுத்தாலும் தொடர்ந்து படித்துகொண்டே தான் இருக்க வேண்டும்...
அரசு பணி கனவு உங்கள் வீட்டு கதவினை தட்டும் வரை படிப்புக்கு என்றும் எல்லை இல்லை என்பதை மனதில் வைத்து மீண்டும் தொடர்ந்து படித்து கொண்டே தான் இருக்க வேண்டும்...
முதன் முதலாக போட்டி தேர்வு எழுதியவர்கள் 120+ எடுத்து இருந்தாலே நல்ல முயற்சி தான்... அப்பாடி நம்மலால முடியாதுடா சாமி எதாவது தனியார் வேலைக்கு செல்லலாம் என்று முடிவு எடுத்தால் இந்த உலகில் பெரிய முட்டாள் நீங்கள் தான்...
பாதி கிணறு தாண்டிய பிறகு எந்த இடத்தில தவறு செய்தோம் என்று ஆராய்ந்து அது இலக்கணம், இலக்கியம், கணிதம், நடப்பு நிகழ்வுகள், அறிவியல், வரலாறு, etc இப்படி எந்த இடத்தில நாம் வீக் என்று கண்டுபிடித்து விட்டாலே மீதி கிணறை தாண்டி அரசு பணியை வாங்கி விடலாம்...
கிணறு தாண்டுவதும் இல்லை அந்த கிணற்றில் விழுந்து முழுகுவதும் உங்கள் கையில் தான் உள்ளது...
3 மாதம் படிப்பது அப்பறம் தேர்வு முடிந்த உடனே ஏதாவது தனியார் வேலைக்கு செல்வது மீண்டும் ஏதாவது தேர்வு அறிவிப்பு வந்த பிறகு படிக்க ஆரம்பிப்பது என்று இருக்க வேண்டாம்.. ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்று வைக்க வேண்டாம்...
சொந்தம் பந்தங்கள் உங்களை பார்த்து ஏளனம் செய்வார்கள் அவர்கள் பேசும் போது நீங்கள் செவிடர்களாக தான் இருக்க வேண்டும்.. உங்கள் பதிலை tnpsc அரசு பணியை வாங்கிய பிறகு அந்த சொந்தம் வருவானுர்களே பிறகு எதோ புதுசா வந்த புது மாப்பிள்ளை மாதிரி விழுந்து விழுந்து கவனிப்பாங்க...
தொடர்ந்து வரும் (group2A/ group2) தேர்விற்கு நன்கு இப்பொழுது இருந்தே படிக்க ஆரம்பிக்கவும்....
by ARAJENDRA KARTHIk








