திருக்குறள்
அதிகாரம்:இறைமாட்சி
திருக்குறள்:384
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு.
விளக்கம்:
அறநெறி தவறாமலும், குற்றமேதும் இழைக்காமலும், வீரத்துடனும், மானத்துடனும் ஆட்சி நடத்துபவர்களே சிறந்தவர்களாவார்கள்.
பழமொழி
Beware of him that telleth tales.
புறங்கூறி திரிபவனிடம் எச்சரிக்கையாக இரு .
இரண்டொழுக்க பண்புகள்
1. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
2. எனவே எனது அறிவை பாதிக்கும் வகையில் ஆத்திரம் அடைய மாட்டேன்.
பொன்மொழி
விளக்கு வெளிச்சத்தை நம்பும் ஈசல் போல் அல்லாமல் சூரியக் கதிரை நம்பும் சூரியகாந்திப் போல் இருக்க வேண்டும்....... விவேகானந்தர்
பொது அறிவு
1. இந்தியாவில் முதன்முதலில் சொந்தமாக ஒரு விமானம் வாங்கி இயக்கியவர் யார்?
திரு.ஜே.ஆர். டி.டாடா(1932ஆம் ஆண்டு).
2. கார்ட்டூன் படங்களை முதன்முதலில் தமிழ் இதழ்களில் வெளியிட்டவர் யார்?
பாரதியார்.
English words & meanings
Trophology – study of nutrition. ஊட்ட சத்து பற்றிய அறிவியல் படிப்பு.
Terminate - to end or to make something end. முடி அல்லது முடிவுற செய்தல்
*ஆரோக்ய வாழ்வு*
உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் தினமும் 3 பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.
Some important abbreviations for students
R.N - registered nurse
R.R - rail road
நீதிக்கதை
திருக்குறள் நீதிக்கதைகள்
பாட்டியின் புத்திசாலித்தனம்
குறள் :
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.
விளக்கம் :
காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும்.
கதை :
ஒரு ஊர்ல ஒரு வயசாண பாட்டி தனியா வசித்து வந்தாள். அந்த ஊர்ல கொஞ்ச நாளா திருடங்க நடமாட்டம் அதிகமிருந்தது.
ஒரு நாள் பாட்டி வெளியே போய்விட்டு வந்து பார்த்த போது வீட்டுக் கதவு
திறந்திருந்தது. உள்ளே போன பாட்டிக்கு வீட்டுக்குள் ஒரு திருடன்
திரைச்சீலைக்குப் பின்னால் மறைந்து இருப்பது தெரிந்து விட்டது.
அவனை எப்படியும் தப்பிக்க விடக் கூடாது புத்திசாலித் தனமாக பிடிக்கனும்னு நினைச்ச பாட்டி உடனே ஒரு தந்திரம் செய்தாள்.
அங்கிருந்த விளக்கு ஸ்டேண்டின் முன் நின்று கொண்டு, மாய விளக்கே என் மீது
கோபமா? நான் வெளியே போய் வந்ததும் என்ன நடந்தது என்று கேட்பாயே இன்று ஏன்
கேட்கவில்லை என்றாள். இதைக் கேட்டதும் திருடனுக்கு ஆச்சரியம். பேசும்
விளக்கா என்று எட்டிப் பார்த்தான்.
விளக்கு திரைச்சீலையின் அசைவில் லேசாக ஆட பாட்டி, கோபமில்லையா?
அப்படியானால் என்ன நடந்தது சொல்கிறேன் கேள். பக்கத்து வீட்டு ஜூலி இன்று
கடைத் தெருவுக்குப் போகும் போது ஒரு நாய் அவளைத் துரத்தியது. அவள் சத்தம்
போட்டுக் கத்தினாள்.
மீண்டும் விளக்கு காற்றில் அசைய, ஓ எப்படிக் கத்தினாள் என்று கேட்கிறாயா என
பாட்டி கேட்டாள். திருடனுக்கோ ஒன்றும் புரியவில்லை. நமக்கு மட்டும்
ஒன்னும் கேட்க வில்லை. விளக்கு ஆடுவது தெரியுது. ஆனால் கிழவி பேசுகிறாளே
என்று குழம்பினான்.
மாய விளக்கே ஜூலி எப்படிக் கத்தினாள் என்று சொல்கிறேன் என்றபடி பாட்டி
ஹெல்ப் ஹெல்ப் என்று உரக்கக் கத்த அக்கம் பக்கம் வீட்டுக்காரர்கள்
பாட்டிக்கு ஏதோ ஆபத்து என்று ஓடி வந்தவர்கள் திருடனைப் பிடித்து காவல்
நிலையத்தில் ஒப்படைத்தனர்.
நீதி :
காலம் அறிந்து ஒரு அந்த இடத்தில் புத்திசாலித் தனமாக நடந்து கொள்ள வேண்டும்.
இன்றைய செய்திகள்
19.02.20
◆மார்ச் 2020 மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுத
விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் (தட்கல் உட்பட) தேர்வுக்கூட நுழைவுச்
சீட்டுகளை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள்
இயக்ககம் தெரிவித்துள்ளது.
◆மேற்குத்தொடர்ச்சி மலை காடுகளை காப்பாற்றும் தீத்தடுப்பு கோடு: கோடைக்கு முன்பே நவீன கருவிகளுடன் தயாராகும் வனத்துறை.
◆கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்திய தொழில்துறையில் ஏற்பட்டுள்ள தாக்கம்
குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா
சீதாராமன் கூறினார்.
◆20 ஆண்டுகால லாரியஸ் விருது வரலாற்றில் முதல் முறையாக சிறந்த விளையாட்டு
வீரர் விருதை இரண்டு வீரர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர். பார்முலா ஒன் வீரர்
லூயிஸ் ஹாமில்டன், அர்ஜெண்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி ஆகிய
இருவரும் உலகின் சிறந்த விளையாட்டு வீரருக்கான மதிப்பு மிக்க லாரியஸ்
விருதை பகிர்ந்து கொண்டனர்.
◆கெய்ன்ஸ் கோப்பை செஸ் தொடரில் இந்தியாவின் கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றார்.
Today's Headlines
🌸The State Examinations Directorate said that the candidates who
applied for the March 2020 upper-level first-year / second-year general
examinations (including Tatkal) can download the admission cards online.
🌸 Western Ghats Forest Reserve Fire Department is getting ready for summer with modern equipment to save forest
🌸 Chief Minister Pazhanisamy started the sixth phase excavation at
Keezhadi near Tiruppuvanam in Sivagangai District by Video Conference
from Chennai.
🌸Union Finance Minister Nirmala Sitharaman said that the Central
Government is investigating the impact of coronavirus on Indian
industry.
🌸Two players share the Best Athlete Award for the first time in the
20-year Laurius Award history. Formula One player Luis Hamilton and
Argentine footballer Lionel Messi have shared the prestigious Laurius
Award for the best player in the world.
🌸India's Koneru Hampi won the Cairns Cup championship in Chess Series.
Prepared by
Covai women ICT_போதிமரம்