இன்று மகாசிவராத்திரி இன்றைய நாள் உங்களுக்கு சிவ பெருமான் அருளால் இந்நாள் நன்நாளாக அமைய என் இனிய நல் வாழ்த்துக்கள்... 🙏🙏🙏
ஓம் நமசிவாய
இனிய மகாசிவராத்திரி நல்வாழ்த்துகள் ஈசன் அருளுடன் வாழ்க வளமுடன்.
சிவனுக்கு உகந்த மகாசிவராத்திரியின் வரலாறு.!
மகாசிவராத்திரி சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும்.
சிவராத்திரி என்றால் என்ன?
ஓம் நமசிவாய
இனிய மகாசிவராத்திரி நல்வாழ்த்துகள் ஈசன் அருளுடன் வாழ்க வளமுடன்.
சிவனுக்கு உகந்த மகாசிவராத்திரியின் வரலாறு.!
மகாசிவராத்திரி சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும்.
சிவராத்திரி என்றால் என்ன?
சிவனுக்குப் பிரியமுள்ள ராத்திரியே சிவன் ராத்திரி. மாதந்தோறும் அமாவாசை நாளில் இருந்து வரும் 14வது திதியன்று சிவராத்திரி அல்லது பிரதோஷ நாட்களாகக் வழிபடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் கிருஷ்ணபட்ச தினத்தை இந்த தினமாகக் கடைபிடிக்கிறோம்.
இந்த நாளில் சிவன் கோவில்களுக்கு சென்று வாழ்க்கையில் முன்னேற்றம், தீய சக்திகள் வேரோடு அகலுதல் போன்ற நன்மைகள் நமக்கு உண்டாகும்.
சிவராத்திரி தோன்றிய விதம் :
ஒருமுறை பார்வதிதேவி விளையாட்டாக சிவபெருமானின் இரண்டு கண்களையும் மூடியதால், உலகுக்கு ஒளி வழங்கும் சூரிய சந்திரர்களான அவருடைய கண்கள் மூடப்பட்டு எங்கும் காரிருள் சூழ்ந்தது. உலகம் கலங்கி நிலையிழந்தது. உடனே பெருமான் நெற்றியில் உள்ள அக்னிமயமான மூன்றாவது கண்ணைத் திறந்தார். இந்த நெருப்புச் ஜுவாலைகள் தெரிக்கும் கண்ணொளி கண்டு அனைவரும் மேலும் பயந்தனர். அப்போது உமையவள் பரமேஸ்வரனைத் தொழுது பணிந்தாள். இப்படி சக்திதேவி வழிபட்டதன் நினைவாகத் தொடர்ந்து சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
சிவனாரை வழிபட்ட பார்வதிதேவி இந்த நாளில் நான் எவ்வாறு தங்களை வழிபட்டேனோ அந்த முறைப்படி தங்களை வழிபடுபவர்களுக்கு இம்மையில் செல்வமும் மறுமையில் சொர்க்கமும் இறுதியில் மோட்சமும் தரவேண்டும் என்று பரமனிடம் வேண்டிக் கொண்டாள். அப்படியே ஆகட்டும் என்று சிவபெருமானும் அருள்பாலித்தார், அதன்படியே சிறப்புற அனுஷ்டிக்கப்படுகிறது மகாசிவராத்திரி.
புராணங்கள் போற்றும் மகாசிவராத்திரி தினத்தில் உடலையும் உள்ளத்தையும் பரிசுத்தமாக்கி விரதம் இருந்து முழுக்க முழுக்க சிவனாரிடம் மனம் லயித்திருந்து இரவு கண் விழித்து நான்கு காலமும் சிவவழிபாடு செய்யவேண்டும். இதனால் துன்பம் அகன்று சிவஜோதியின் அனுக்கிரஹத்தால் நம் வாழ்வு செழிக்கும்..
ஓம் சிவாய நமஹ...
Shared by M Vijayan