அனைவருக்கும் உணவு என்பது இன்றியமையாத ஒன்று ஆகும். உணவுகள் மீதமாகி
விட்டால் அதனை வீணடிக்கக்கூடாது என்பதற்காக குளிர்சாதன பெட்டியில் வைத்து
அல்லது சுட வைத்து அதனை பல நாட்களுக்கு சாப்பிடுகிறோம்.
அதிலும் சில உணவுகளை பல நாட்கள் வைத்திருந்து கண்டிப்பாக நாம் சாப்பிடவே கூடாது. அவற்றில் சில
காய்கறிகள்
இன்றைய சூழலில் தினமும் காய்கறிகள் கூட வாங்க நேரம் இல்லாமல் மொத்தமாக
வாங்கி ஃப்ரிட்ஜ் வைத்துவிடுவோம். இவ்வாறு வைப்பதால் நஞ்சினை உற்பத்தி
செய்யும் பீட்ரூட், பசலைக்கீரை போன்ற காய்கறிகள் நைட்ரேட்டினை உற்பத்தி
செய்யும்.
இந்த நஞ்சானது காய்கறிகளில் அப்படியே தங்கி சாப்பிடும் போது செல்களை
சிதைக்கும். எனவே இந்த காய்கறிகளை அதிக நாட்கள் வைத்திருக்கக்கூடாது.
சிக்கன்
சிக்கனில் அதிகளவு புரதம் இருப்பதால் 2 நாட்களுக்கு மேலாக சுட வைத்து
சாப்பிடக்கூடாது. அதிக நாட்கள் வைத்து சாப்பிடுவதால் இதயநோய், கல்லீரல்
பாதிப்பு போன்றவை ஏற்படும்.
அரிசி
அரிசியை சமைத்தாலும் அதில் பாக்டீரியாக்கள் பெருக அதிகளவு வாய்ப்புள்ளது. இதனை நாம் சுட வைத்தாலும் அது உயிரோடு தான் இருக்கும்.
இவை இரட்டிபாகி ஜீரண தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால் அரிசியை
திரும்ப திரும்ப சுட வைக்கக்கூடாது. மீதமுள்ள அரிசியில் நீர் ஊற்றி
சாப்பிடும் போது நன்மை தரும்.
வெஜிடேபிள் எண்ணெய்
சூரியகாந்தி, எள் எண்ணெய் போன்றவற்றை திரும்ப சுட வைத்து உபயோகிப்பதை
போல தீயது ஏதும் இல்லை.இதனால் இதய தொடர்பான நோய்கள், புற்றுநோய் போன்றவை
உருவாகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...