நாம் சாப்பிடக்கூடிய உணவில் இரத்த சர்க்கரையை அதிகரிக்கும் தன்மை இருந்தால்
அப்படிப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. நீரிழிவு நோயை
குணப்படுத்தாவிட்டால் உடலில் மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படும்.
நம் சமையலறையில் இருக்கக்கூடிய வெங்காயத்தை கொண்டு நீரிழிவு நோயை மிக
எளிதில் கட்டுப்படுத்தலாம். தினமும் உணவில் வெங்காயத்தை சேர்த்து கொண்டால்
இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். வெங்காயத்தில் க்ளைசமிக்
இண்டெக்ஸ் மிகவும் குறைவாக இருக்கிறது. 55-க்கும் குறைவான க்ளைசமிக்
இண்டெக்ஸ் உள்ள உணவுகள் நீரிழிவு நோய்களுக்கு சிறந்தது.
வெங்காயத்தில் கார்போஹைட்ரேட் குறைவாக இருக்கிறது.
நீரிழிவு நோயின் பாதிப்பு இருப்பவர்கள் அதிகபடியாக கார்போஹைட்ரேட் உள்ள
உணவுகளை எடுத்து கொள்ள கூடாது. அரை கப் வெங்காயத்தில் 5.9 கிராம்
கார்போஹைட்ரேட் இருக்கிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு நார்ச்சத்து மிகுந்த உணவு மிகவும் நல்லது.
வெங்காயத்தில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானம் மற்றும் வயிறு
சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படாது.
வெங்காயத்தை அப்படியே பச்சையாக சாப்பிடலாம். தொடர்ச்சியாக வெங்காயம்
சாப்பிட்டு வந்தால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறைந்து இருதயம் ஆரோக்கியமாக
இருக்கும்.
பெரும்பாலும் சிவப்பு வெங்காயத்தை சாப்பிடுவதால் இரத்த சர்க்கரை அளவு
குறையும். மதிய மற்றும் இரவு உணவுகளுடன் வெங்காயத்தை சேர்த்து சாப்பிடலாம்.
சாண்ட்விச்சில் வெங்காயம் சேர்த்து சாப்பிடலாம்.
நாவற்பழம், பட்டை, முட்டை, கீரைகள், விதைகள், கொட்டைகள், க்ரீக் யோகர்ட்,
மஞ்சள், சியா விதைகள், ப்ரோக்கலி, ஆளி விதை, ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும்
பூண்டு ஆகியவற்றை சாப்பிடுவதால் இரத்த சர்க்கரை அளவு குறையும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...