நாம் அனைவருமே எடுத்துக் கொண்ட செயலில் வெற்றி பெற வேண்டும் என்றே விரும்புகிறோம் . ஆனால், அனைவராலும் வெற்றி பெற முடிவதில்லை . இந்த செயலில் ஏன் என்னால் வெற்றி பெற இயலவில்லை என்று பலரும் யோசிப்பது இல்லை ..
மாறாக , அவ்வளவு தான் நமக்கு கொடுத்து வைத்து என்று நமக்கு நாமே சமாதானம் அடைகின்றோம்...
ஆசை மட்டும் இருந்தால் வெற்றி கிட்டாது. ஆசையுடன் சில செயல்களையும் மேற்கொண்டால் மட்டுமே வெற்றி கிட்டும் .
அதற்கு செய்ய வேண்டியன என்ன ? இதோ சில உங்களுக்காக ...
* நாம் எடுத்துக் கொண்ட செயலில் வெற்றி பெற ஆசையுடன் விடா முயற்சியும் , நம்பிக்கையும் தேவை
. அந்த நம்பிக்கை , "என்னால் நிச்சயம் இந்த காரியத்தை முடிக்க இயலும் " என்ற மனஉறுதியுடன் அமைய வேண்டும் .
அப்படி இருந்தால் மட்டுமே நீங்கள் திறமை உள்ளவராக இருந்தாலும் கூட உங்களால் வெற்றி பெற இயலும் .
* பிரச்னைகள் வரும் போது , நான் இவ்வளவுதான் , இது என் விதி என்று மனம் தளரக் கூடாது . மாறாக , என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை இருக்க வேண்டும் .
அப்படி . நம்பினால் , நீங்கள் புதியவனாக , புதியவளாக மாற முடியும் .
அந்த தன்னம்பிக்கை தோல்வியுறுபவர்களை , வெற்றியாளராக்கும் ; சோம்பேறிகளை சுறுசுறுப்பான வர்களாக மாற்றும் .
* உங்கள் இலக்கை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள் .அந்த இலக்கை பாசிடிவ் எண்ணங்களும் , நம்பிக்கைகளும் சூழ்ந்திருக்க வேண்டும் .
பின் , ஆக்கப்பூர்வமாக அதை தொடர்ந்து செய்யும் போது உங்களால் வெற்றி அடைய முடியும் .
* தன்னம்பிக்கையும் தைரியமும் நீங்கள் நினைக்கும் எண்ணங்களோடு இணைந்திருக்கும் போது உங்களுக்கு வெற்றி நிச்சயம் .
மாறாக , எதிர்மறையான ( நெகடிவ் ) எண்ணங்களை வளர்த்துக் கொண்டால் , விளைவும் மோசமானதாகத்தான் இருக்கும் .
ஏனென்றால் ,
உங்கள் ஆழ்மனம் , உங்கள் எண்ணங்கள் அனைத்தை யும் ஏற்றுக் கொள்கிறது .ஆழ்மனதிற்கு நீங்கள் எதை அனுப்புகிறீர்களோ, அதையே உங்களுக்கு திருப்பி அனுப்புகிறது .
உதாரணமாக , தாழ்வுணர்ச்சி , பயம் போன்றவற்றை நீங்கள் வளர்த்துக் கொள்ளும்போது , அது உங்கள் ஆழ்மனதினுள் சென்று அதையே திரும்ப அனுப்புகிறது .
ஆக , நீங்கள் உங்கள் மனதினுள் அனுப்புவதையே பெறுகிறீர்கள் .
ஆம்.,நண்பர்களே.,
மனதை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து , அதில் , ஆரோக்கியமான, ஆக்கப்பூர்வமான,நல்ல எண்ணங்களால் நிரப்புங்கள் .
வெற்றி நிச்சயம்
தெ.இரவிச்சந்திரன்🙏








