
வினைப்பயன்களாலேயே இந்த வாழ்க்கை உருவாகிறது. நல் வினைகளோடு
பிறந்தவர்கள் வாழ்வில் நற்பயன்களையும் தீவினைகளோடு பிறந்தவர்கள்
துன்பத்தையும் வாழ்வில் அனுபவிக்கின்றனர் என்கின்றன சாஸ்திரங்கள். ஆனால்
அவையே இதற்கான தீர்வையும் சொல்கின்றன. ரிஷிகளும் ஞானிகளும் மனிதர்களின்
பாவத்தைப் போக்கும் விரத நாள்களைக் கண்டு தெளிந்து அவற்றை ஒரு முறையாக
வகுத்தனர். யார் எந்த தெய்வத்தை வணங்குபவர்களாக இருந்தாலும் அவர்கள்
தங்களின் இஷ்ட தெய்வத்தை வழிபட உகந்த நாள்களை உருவாக்கி அன்று வழிபடவேண்டிய
முறைமைகளையும் உருவாக்கினர்.