சென்னையில் ஒரு ரயில் நிலையம், சேத்துப்பட்டு என்ற பெயரில் உள்ளதே; அதை த் தெரியுமா?
தனி
மனிதர் ஒருவர் சொந்தமாக கார், பேருந்து, விமானம் ஏன் கப்பல் கூட
வைத்திருப்பார்கள், ஆனால், சொந்தமாக ரயில் வைத்திருக்கிறார்களா? ஆம்,
தமிழர் ஒருவர் வைத்திருந்திருக்கிறார்.
அவர் தான் சென்னையைச் சேர்ந்த தாட்டிகொண்ட "நம்பெருமாள் செட்டியார்".
அவர் தான் சென்னையைச் சேர்ந்த தாட்டிகொண்ட "நம்பெருமாள் செட்டியார்".
தற்போது
சென்னையில் உள்ள சேத்துப்பட்டு பகுதியின் வரலாற்றுக்கு சொந்தக்காரரான இந்த
நம்பெருமாள் செட்டியார், சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற பல சிவப்பு நிற
கட்டிடங்களை உருவாக்கியவர்.
பாரிமுனையில்
உள்ள உயர் நீதிமன்றம், சட்டக்கல்லூரி, எழும்பூரில் உள்ள சிற்பக் கலை
கல்லூரி, மியூசியம், கன்னிமாரா நூலகம் போன்றவை இவரால் கட்டப்பட்டவை.
18 ஆம் நூற்றாண்டில் பிரபலமான பில்டிங்
காண்ட்ராக்டராக இருந்த இவர் வாழ்ந்த வீடு 'வெள்ளை மாளிகை' என்ற பெயருடன்
சேத்துப்பட்டு மேம்பாலம் அருகில், டாக்டர்.மேத்தா மருத்துவமனையின்
பின்புறம் உள்ளது.
3 மாடிகள், 30 அறைகள் கொண்ட இந்த வீடு தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.
இதில், சீனா, ஜப்பான், இத்தாலி, இங்கிலாந்து போன்ற நாடுகளில், பீங்கானில் செய்யப்பட்ட அரிய கலைப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.
எழும்பூர் பாந்தியன் சாலையிலிருந்து, ஹாரிங்டன் சாலை வரை உள்ள நிலப்பரப்பு நம்பெருமாளுக்கு சொந்தமாக இருந்தது.