Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
இது கதை அல்ல.முற்றிலும் உண்மை. இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் பற்றி அனைவரும்...
இது கதை அல்ல.முற்றிலும் உண்மை. இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் பற்றி அனைவரும்...
இது கதை அல்ல.முற்றிலும் உண்மை.
இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் பற்றி அனைவரும் அறிவோம். அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் ஒரு பள்ளியின் ஆண்டு விழாவில் பேசியது இது....
நானும் என் மனைவியும் ஒரு அழகான தோட்டத்துடன் ஒரு புதிய வீட்டைக் கட்டியுள்ளோம், அதில் அழகான மூங்கில் மரங்கள் உள்ளன.அப்பொழுது தான் இந்த சீன மூங்கில் மரத்தைப் பற்றிப் படிக்க நேர்ந்தது.
சீன மூங்கில்.
ஒரு விவசாயி சீன மூங்கில் விதையை விதைக்கிறான்.மற்ற தாவரங்களைப் போலவே சீன மூங்கிலுக்கும் நீர், வளமான மண், சூரிய ஒளி அவசியத் தேவை. விதைத்து ஒரு வருடம் ஆகியும் ஒரு மாற்றமும் இல்லை.விதையில் இருந்து உயிர் வருவதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை.இரண்டாம் ஆண்டும் மண்ணுக்கு மேலே எந்த ஒரு வளர்ச்சியும் இல்லை. மூன்றாம் ஆண்டு,நான்காம் ஆண்டுகள் கடந்தும் ஒரு மாற்றமும் இல்லை.
ஐந்தாம் ஆண்டு அந்த அதிசயம் நடக்கிறது. விதையில் இருந்து உயிர் பிறக்கிறது. வளர்ச்சி... அதுவும் எப்படிப்பட்ட வளர்ச்சி... அசுர வளர்ச்சி... வெறும் ஆறு வாரங்களில் 80 அடி வளர்ச்சி.உங்கள் கண்களாலயே அந்த வளர்ச்சியைப் பார்க்க முடியும்.
இதை இரண்டு கோணங்களில் பார்க்கலாம்.
1) சீன மூங்கில்
ஐந்தாம் ஆண்டு அதிவேகமாக வளர சீன மூங்கில் மரம் நான்கு ஆண்டுகளாக செயலற்ற நிலையில் இருந்ததா? இல்லை... மரம் ஒரு வலுவான கண்ணுக்குத் தெரியாத அடித்தளத்தை(வேர்) உருவாக்கவில்லை என்றால் அது வளர்ந்தவுடன் அதன் வாழ்க்கையை தக்க வைத்திருக்க முடியாது. இதே கொள்கை நமக்கும் பொருந்தும்.
நாமும் நம் கனவை, குறிக்கோளை அடைய சீன மூங்கிலைப் போல் பொறுமை, கடின உழைப்பு, சவால்களை சமாளிப்பதற்கான அடித்ததளத்தை அமைத்தால் மட்டுமே நம் வெற்றி நிலைக்கும். வாழ்வில் வளர்ச்சி பொங்கும்.
2)விவசாயி.
அந்த விவசாயிடம் இருந்தது நம்பிக்கை மட்டுமே. மரத்துக்கு (குறிக்கோள்) தேவையான வளமான மண், சூரிய ஒளி, நீர்ப்பாசனம் எல்லாம் அமைத்துத் தரும் விவசாயிக்கு இருந்த கண்டிப்பாக மரம் வளரும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை.
நமக்கும் இது பொருந்தும்.அது வாழ்க்கையா இருந்தாலும். வியாபாரமா இருந்தாலும் நாம செய்யுற செயலில் நம்ப குறிக்கோள்களை அடைய முடியும்ங்கிற நம்பிக்கை மிக மிக அவசியம்.நம்பிக்கை ஒரு சக்தி வாய்ந்த உணர்வு அது ஒரு மனிதனுக்கு வந்து விட்டால் வெற்றி எட்டும் கனியே.
ஆனால், நம்மில் பல பேருக்கு அங்கு தான் சிக்கலே.நாம் விதைத்த உடனே அறுவடைக்கு காத்திருக்கத் துவங்கி விடுகிறோம்.பொறுமை இழக்கிறோம். இந்த பொறுமையின்மை நம் நம்பிக்கையை தளர்க்கிறது.நாம் சரியாகத் தான் விதைத்தோமா என்ற சந்தேகம் எழுகிறது. விரைவில் மரம்(குறிக்கோள் ) வளர, சிலர் விதைத்த இடத்தைத் தோண்டி விதையை வேறு இடத்தில் புதைக்கின்றனர். இன்னும் சிலர் விதைத்த இடத்தை விட்டுவிட்டு இது வளராது என்று முடிவு செய்து மனம் சோர்கின்றனர் .
நாம் உணரத் தவறியது என்னவென்றால், நாம் நம் நம்பிக்கையைக் கைவிடாமல் பிடிவாதமாக இருந்தால் மட்டுமே நம் கனவை அடைய முடியும்.நம் கனவுக்கு நம் நம்பிக்கை நீராகவும், உரமாகவும் இருந்தால், சீன மூங்கில் மரத்தைப் போலவே நம் கனவு நடக்கும்.
இதற்கு வாரங்கள் ஆகலாம். இதற்கு மாதங்கள் ஆகலாம். இது பல ஆண்டுகள் கூட ஆகலாம்.ஆனால் இறுதியில், வேர்கள் பிடிக்கப்பட்டு உங்கள் சீன மூங்கில் மரம் வளரும்.
உங்களிடம் ஒரு சீன மூங்கில் மரம் உள்ளது. ஆகவே நீர்ப்பாசனம் செய்து நம்பிக்கையுடன் காத்திருங்கள்...
நீங்களும் உயரமாகப் பறப்பீர்கள்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









