⭕⭕பொதுமக்களை அச்சுறுத்தும் படி டிக்டாக் செய்து வீடியோ வெளியிட்டு வந்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். பேருந்து நிலையம், ரயில் நிலையம், சாலை என பொது இடங்களில் பெண்களை அச்சுறுத்தி கிண்டல் செய்யும் வகையில், இளைஞர் ஒருவர் நடனமாடி டிக்டாக் வீடியோ வெளியிட்டார்.
⭕⭕புதுக்கோட்டையைச் சேர்ந்த அந்த இளைஞர் மீது எஸ்.பி அருண் சக்திகுமார் நடவடிக்கை எடுத்த உத்தரவிட்டார். இதையடுத்து டிக்டாக் ஐடி மூலம் ஆய்வு செய்து புதுக்கோட்டை மாவட்டம் கருக்காக்குறிச்சி அடுத்த ராஜாகுடியிருப்பைச் சேர்ந்த கண்ணன் என்ற கல்லூரி மாணவரை வடகாடு போலீசார் கைது செய்தனர்.
⭕⭕அவர் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், பொதுமக்களை அச்சுறுத்தி இடையூறு ஏற்படுத்துதல்ஆகிய இருபிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் போலீசார் சொந்த ஜாமீனில் அந்த மாணவனை விடுவித்ததுடன், இனி இது போன்று செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்