குக்கிராமங்களுக்கும் Internet சேவை வழங்க வருகிறது 'பறக்கும் செல்போன் டவர்கள்'. - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Monday 24 February 2020

குக்கிராமங்களுக்கும் Internet சேவை வழங்க வருகிறது 'பறக்கும் செல்போன் டவர்கள்'.

குக்கிராமங்களுக்கும் Internet சேவை வழங்க வருகிறது 'பறக்கும் செல்போன் டவர்கள்'...
ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால் வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான, நிலையான இணையதள இணைப்பு என்பது நகரங்களில் இருந்து தொலைதூரங்களில் உள்ள பகுதி மக்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. 
இந்த பிரச்னைக்கு தீர்வு காண கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், இடையூறு இல்லா இணையத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. கென்யாவில் லூன்..
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் 'லூன் தொழில்நுட்பம்' பல நாடுகளின் கிராமப்புற பகுதிகளில் இணையத்தை எளிதாக்கியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் ஒரு டென்னிஸ் கோர்ட் அளவிலான பலூன்கள் 12 மைல் உயரத்தில் காற்றில் பறக்கவிடப்பட்டு, 
அதன் மூலம் 25 மைல் சுற்றளவில் இணைய இணைப்பு வழங்கப்படும். இரு ஆண்டுகளுக்கு முன் கென்யாவின் சில பகுதிகளில் இணையத்தை அடைய இது பயன்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவின் கிராமப்புற மற்றும் அணுக முடியாத பகுதிகளில், 
பறக்கும் மொபைல் கோபுரங்களைப் பயன்படுத்தி இணைய சேவையை வழங்க 2017 முதல் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று, Telelift என்ற பெயரில் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. 
பறக்கும் செல்போன் டவர்: Telelift என்பது பறக்கும் செல்போன் டவரை உருவாக்கும் முயற்சி ஆகும். இதற்காக டைனிங் டேபிள் அளவிலான ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகிறது. 
இவை நீண்ட கம்பி மூலம் தரையில் இணைக்கப்படும். குறைந்தது ஒரு மாதமாவது Telelift காற்றில் பறக்க முடியும் என அதனை தயாரித்து வரும் நிறுவனம் கூறியுள்ளது. 
ட்ரோன் கான்சப்ட்.. 
கடந்த 2017-ம் ஆண்டில் இண்டியானாவில் உள்ள பர்டியூ(Purdue) பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்த ராகுல் திவாரி என்பவர் இந்த கான்செப்டை முதலில் தெரிவித்துள்ளார். 
மைக்ரோவேவ் போன்ற அளவிலான சக்தியைப் பயன்படுத்தி, சோலார் பேனல்கள் அல்லது வேறு மின்சார சக்தியுடன் இணைக்கப்பட்டிருக்கும் போது அவரது ட்ரோன்கள் 200 அடியில் பறக்கின்றன. 
திவாரி துவக்கத்தில் தனது ட்ரோன்களை ஆப்பிரிக்காவில் பறக்கும் காவல் கோபுரங்களாக பயன்படுத்த விரும்பினார். பின்னர் தொழித்துறையினருடன் பேசிய பிறகு அந்த எண்ணத்தை மாற்றி கொண்டுள்ளார். 
தற்போது திவாரி கண்டறிந்த தொழிநுட்பத்தில் உருவாக்கப்பட்டு வரும் ட்ரோன்கள் நீண்ட காலத்திற்கு பறக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. அவற்றுடன் 4ஜி ரவுட்டர்களை இணைத்தால், எங்கு வேண்டுமானாலும் இணைய வசதியை அளிக்க முடியும். 
20 மைல் முதல் 30 மைல்... 
மொபைல் கவரேஜ் கணிசமாக குறையும் பகுதிகளில் நிறுவப்படும் ஒரு ட்ரோன் மூலம் ஏராளமான வாடிக்கையாளர்களுக்கு இனைய சேவையை தங்கு தடையின்றி வழங்க முடியும் என கூறப்படுகிறது. 
ஒவ்வொரு ட்ரோனும் 20 மைல் முதல் 30 மைல் வரையிலான சுற்றளவில் பல நூறு பேருக்கு உயர்தர இணையத்தை வழங்க முடியும். இதன்படி எனவே தொலைதூர பகுதிகளுக்கு ஒரு ட்ரோன் மட்டுமே தேவைப்படலாம். அதே நேரத்தில் புறநகர்ப் பகுதிகளுக்கு பல ட்ரோன்கள் தேவைப்படலாம். 
கம்பி அறுந்தாலும்.. 
இந்த Telelift ட்ரோன்களின் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.29 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. முழுவதும் ஆட்டோமேட் செய்யப்பட்டிருக்கும் இந்த வகை ட்ரோன்களை புறப்பட செய்யவும், தரையிறக்கவும் ஒரு பைலட்தேவை. 
Telelift பேக்-அப் பேட்டரி மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே தரையுடன் இணைக்கப்படும் கம்பி அறுபட்டாலும், அது உயரத்தில் பறந்து கொண்டே இருக்கும். பின்னர் பாதுகாப்பாக தரையிறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 
அவசர கால தேடல் மற்றும் மீட்புக்கு Telelift ஒரு சிறந்த தயாரிப்பகை இருக்கும். ஆனால் ஆப்பிரிக்காவில் நிலவும் கடும் வெப்பத்தை தானாக Telelift ட்ரோன்களுக்கு மேம்பட்ட இயந்திரங்கள் மற்றும் பாகங்கள் தேவை என்ற கருத்து நிலவுகிறது. 
இணைய தேவை குறைவாக இருக்கும் நேரங்களில் Telelift ட்ரோன்கள் தரையிறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Internet service for hamlets to 'flying cell phone towers' ...

The number of smartphone users is increasing day by day. But a reliable, consistent Internet connection for customers is the main attraction of the city to the remote areas. To solve this problem, leading technology companies, including Google and Facebook, are interested in bringing people to the Internet without interruption. Loon in Kenya .. Google's parent company, Alphabet's 'Loon Technology' has made the Internet easier in rural areas of many countries.
This technology allows a tennis court sized balloon to fly up to 12 miles in the air, providing an internet connection of up to 25 miles. Two years ago it was announced that it was being used to reach the Internet in some parts of Kenya. Since 2017 efforts have been made to provide internet service using flying mobile towers in rural and inaccessible areas of South Africa. In the meantime, a US start-up company is making an effort under the name Telelift.
Flying Cell Tower: 

Telelift is an attempt to create a Flying Cell Phone Tower. For this purpose, dining table-sized drones are used. These will be connected to the ground by a long wire. The company that manufactures it says Telelift can fly in the air for at least a month.
Drone Concept ..
The concept was first revealed in 2017 by Rahul Tiwari, an engineering student at Purdue University in Indiana. His drones fly under 200 feet when connected to solar panels or other electric power, using microwave-like power. Tiwari initially wanted to use his drones as flying towers in Africa. He later changed his mind after talking to professionals. Drones are currently being built on the technology that Tiwari has invented and will be flying for a long time. Connecting 4G routers with them can provide internet connectivity anywhere.
20 miles to 30 miles ...
A drone installed in areas where mobile coverage is significantly reduced is said to be able to provide off-the-shelf service to a large number of customers. Each drone can provide high quality internet for several hundred people in a range of 20 miles to 30 miles. Accordingly, only a drone may be needed for remote areas. Suburbs may require multiple drones at the same time.
Even if the wire is broken ..
The initial price of these Telelift drones is said to be around INR 29 lakhs. These are fully automated types of drones that need a pilot to take off and land. Telelift has a back-up battery and control system. So even if the wire attached to the floor is sixty, it will fly high. It is said that they will be safely landed later. Telelift will be a great product for emergency search and rescue. However, there is a perception that the high heat in Africa will automatically require advanced machines and accessories for telelift drones. Telelift drones are said to land in times of low internet demand.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H