#பழங்களின்_மகத்துவம்❗இயற்கை மனிதர்களுக்கு அளித்த மகத்தான வரங்களே பழங்களாகும். - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


#பழங்களின்_மகத்துவம்❗இயற்கை மனிதர்களுக்கு அளித்த மகத்தான வரங்களே பழங்களாகும்.

பழங்களில் புரதச் சத்தும் குறைவான கொழுப்புச் சத்தும் நமக்குப் போதுமான அளவில் இருக்கின்றன. பெரும்பாலான பழங்களின் ஈரப்பதம் 80 சதவிகிதம் உள்ளது. கார்போ ஹைட்ரேட் 20 சதவிகிதமே உள்ளது. பழங்கள் உணவாக மாறிட இதுவே காரணம். அவைகளில் தாது உப்புகள் உள்ளன. உயிர்ச்சத்தான வைட்டமின்கள் உள்ளன. மேலும் பேதி மருந்துபோல் செயல்பட்டுக் குடலைச் சுத்தப்படுத்தி விடுகின்றன.
உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் சி, ஆர்கனிக் அமிலம் என பல வடிவங்களில் பழங்கள் பயன்படுவதால், முதுமையும் தள்ளிப் போகிறது. சக்தியும், புத்துணர்வும் உடனுக்குடன் கிடைக்கிறது. உடல் உறுப்புகள் மலிவான செலவில் புதுப்பிக்கப்படுகின்றன.
நமது உடலில் 80% நீர் உள்ளது. அதே போல், பழங்களிலும் 80% நீர்ச் சத்து உள்ளது. பொதுவாக நாம் உண்ணும் உணவில் நீர்ச் சத்து அதிகம் இருப்பது நல்லது. அப்படிப்பட்ட உணவுகள் முக்கியமாகப் பழங்களும் காய்கறிகளும்தான். பழங்களில் அதிக அளவு நார்ச்சத்து, நீர்ச்சத்து, வைட்டமின் C நிரம்பியவை. அதோடு நமது திசுக்களை அழித்துவிடாமல் பாதுகாக்கும் பைடோ கெமிக்கல்ஸ் நிரம்பியவை. இதனால் பழங்களைச் சாப்பிடுவதால் நோய் வராமல் தடுக்க முடியும்.

அன்றாடம் பழங்களைச் சாப்பிடுவதால் புற்று நோய், இருதய நோய், மாரடைப்பு, மறதி, காட்ராக்ட் மற்றும் மூப்பில் வரக்கூடிய பல நோய்களைத் தடுக்கலாம். பழங்களைச் சாப்பிடுவதால் நமக்கு மன அழுத்தம் ஏற்படாமல் தடுக்கலாம்.

எப்படிச் சாப்பிடலாம்?

பழங்கள் சாப்பிடும் முறை

வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல்

புற்றுநோயாளிகள் மரணத்தைத் தழுவக்கூடாது.புற்றுநோயாளிக்கான சிகிச்சை ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது- அது நாம் பழங்கள் எடுத்துக் கொள்ளும் முறையில் உள்ளது.

பழங்களைச் சாப்பிடுவதென்றால், சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துக் கொள்வது அல்ல!!

பழங்களை வெறும் வயிற்றிலேயே சாப்பிட வேண்டும்!!
பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், அது நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு, மற்றும்
வாழ்வின் மற்ற செயல்களுக்குத் தேவையான அதிகப்படியான ஆற்றலைத் தருவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது!!

பழங்கள் ஒரு முக்கியமான உணவு

சாதாரணமாக நீங்கள் இரண்டு துண்டுகள் பிரட், அதன்பின் ஒரு துண்டு பழம் என்று எடுத்துக் கொள்கிறீர்கள் எனக் கொள்வோம்.

பழத்துண்டு வயிற்றின் வழியே நேராகக் குடலுக்குள் செல்லத் தயாராக இருக்கிறது. ஆனால் பழத்திற்கு முன்னால் எடுத்துக்கொண்ட
'பிரட்' டினால் பழம் குடல் பகுதிக்குச் செல்வது தடுக்கப்படுகிறது.

இந்த சராசரி நேரத்தில் முழு உணவான பிரட் மற்றும் பழம் இரண்டும் அழுகி, புளித்து, அமிலமாக மாறுகிறது. பழம் வயிற்றிலுள்ள உணவு மற்றும் செரிமானத்துக்கு உதவும் சாறுகளுடனும் சேரும் நிமிடத்தில், அந்த முழு நிறையான உணவு கெட்டுப் போக ஆரம்பிக்கிறது.

உணவுக்குப் பின் பழம் எடுக்கும் போது, பழமானது மற்ற உணவுடன் சேர்ந்து அழுகுவதால், வாயு உற்பத்தியாகி வயிறு ஊதக் காரணமாகிறது!!

நரை முடி தோன்றுவது, தலையில் வழுக்கை விழுவது, நரம்புகளின் திடீர் எழுச்சி, கண்களின் கீழ் கருவளையம் தோன்றுவது இவை யெல்லாமே, வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்துக் கொண்டால் தடுக்கப்படும்.

ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களெல்லாம் அமிலத் தன்மையுடையவை என்பதெல்லாம் உண்மையில்லை. எல்லாப் பழங்களும், நமது உடலுக்குள் சென்றதும் காரத்தன்மையாகின்றன.

சரியான முறையில் பழங்கள் சாப்பிடும் வகையை முழுவதுமாக அறிந்து கொண்டால், நமக்கு அழகு, நீண்ட ஆயுள், உடல் ஆரோக்கியம், உடலுக்குத் தேவையான சக்தி, மகிழ்ச்சி மற்றும் சரியான எடை கிடைத்து விடும்.

🥤✅நீங்கள் பழச்சாறு அருந்தும் தேவை ஏற்படும் போது, புதிதான பழச்சாறுகளையே அருந்துங்கள்.

டின், பாக்கட், மற்றும் பாட்டில் இவற்றில் அடைக்கப்பட்ட ரெடிமேட் பழச்சாறுகளையும், சூடாக்கப்பட்ட  பழச்சாறுகளையும் குடிக்க வேண்டாம். ஆனால் பழச்சாறு சாறு அருந்துவதை விட பழங்களை முழுதாகச் சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

நீங்கள் பழச்சாறு குடிப்பதாயிருந்தால், மடமடவென்று குடிக்காமல், மெதுவாக ஒவ்வொரு வாயாக அருந்தவும். ஏனென்றால், நீங்கள் பழச்சாறு விழுங்குவதற்கு முன், அதனை வாயிலுள்ள உமிழ்நீரோடு நன்கு கலக்கச் செய்து பின் உள்ளே அனுப்பவும்.

🍓🥭🍑✅பதப்படுத்தப்பட்ட, சமைத்த பழங்களையும் உண்ணாதீர்கள். ஏனெனில் அவற்றிலிருந்து உங்களுக்கு எந்த விதமான சத்துக்களும் கிடைக்காது. சமைத்த பழங்களில் அதிலுள்ள விட்டமின்கள் அனைத்தும் அழிக்கப் படுகின்றன. உங்களுக்கு அதன் சுவை மட்டுமே கிடைக்கிறது.

உங்கள் உடல் உறுப்பக்களைச் சுத்தம் செய்யவும், உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றவும் ஒரு 3- நாட்கள் பழங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம்.
அந்த 3 நாட்களும், பழங்களை மட்டும் சாப்பிட்டு, மற்றும் புதிதாய் எடுக்கப்பட்ட பழச்சாறுகளையும் மட்டுமே நாள் முழுவதும் எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த டயட்டின் முடிவு நீங்களே ஆச்சரியப் படும்படி, நீங்கள் மிகவும் அழகாய், வனப்புடன் தோற்றமளிப்பதாய் உங்கள் ஃபிரண்ட்ஸ் கூறும்போது உணர்வீர்கள்.

உற்சாகத்திற்கு வாழை 🍌

தினமும் வாழைப்பழம் உண்போர் நெடுநாட்கள் இளமைத் தெருவிலேயே வசிக்கிறார்கள். உற்சாகம் இழக்கும்போதும், காய்ச்சல் நேரத்திலும் இதைச் சாப்பிடலாம். நம் மூளையில் செரடோனின் என்ற பொருளை வாழைப் பழமே தயாரிக்கிறது. இது நன்கு சுரக்கும்போது, நரம்பு மண்டலம் விழித்தெழுகிறது. மன அழுத்தத்தைக் குறைக்கிறது. மனநலம் குன்றியோருக்கு வாழைப்பழம் ஓர் அட்சய பாத்திரம்.

குரல் வளத்திற்கு அன்னாசி 🍍

அன்னாசிப் பழத்தில் புரோமெலின் என்னும் செரிமானப் பொருள் உண்டு. இது இறைச்சியையும் விரைந்து செரிக்க உதவுகிறது. நல்ல குரல் வளம் தருகிறது. தொண்டைப் புண் ஆற்றுகிறது. சதை வளராமல் தடுக்கிறது. இதிலுள்ள குளோரின் சிறுநீரக இயக்கத்தை தூண்டிக் கொண்டேயிருக்கிறது. தோலுக்கு அடியிலுள்ள அழுக்குகளையும் இது உறிஞ்சி வெளியேற்றுகிறது.

கொய்யா & பப்பாளி

இவை இரண்டுமே விட்டமின் - சி நிறைந்தது. உயர் விட்டமின்-சி கொண்ட பழங்களைத் தேர்வு செய்தால் சந்தேகத்துக்கிடமின்றி வெற்றி பெறும் தகுதியுடையவை.
கொய்யாப்பழம் நார்ச்சத்து அபரிமிதமாக உள்ளதால், மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.

ஜீரண சக்தி தரும் பப்பாளி

பப்பாளிப்பழம் Carotene சத்துக்கள் நிறைந்தது எனவே கண்களுக்கு மிகவும் நல்லது. பச்சையாக உண்ணக்கூடிய 38 வகைப் பழங்களில் பப்பாளியும் உண்டு. இதில் உள்ள பாப்பைன் என்ற திரவம் ஜீரண சக்தியை தூண்டும். இதன் விதையிலுள்ள கார்சின் சிறந்த பூச்சிக் கொல்லியாகும். மதுவால் கெட்ட கல்லீரலையும், கொசுவால் வந்த யானைக்காலையும், நீரிழிவின் பேரழிவையும் பப்பாளிப் பழம் தடுத்துக் காக்கிறது.

யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளிப்பழம் தினம் கால் பழம் சாப்பிட்டு வர, வீக்கம் கரையும், உடலுக்கும் வலிமை சேர்க்கும்.

ரத்த உற்பத்திக்கு திராட்சை 🍇

திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கும், மீதி உணவுக்குமாக இது பயன்படுகிறது. இதிலுள்ள குளுக்கோஸ் விரைவில் ரத்தத்தை அடைந்து சக்தி தருகிறது. இரத்த உற்பத்தியையும் செய்கிறது. மேலும், மலச்சிக்கல், ஆஸ்துமா, ஒற்றைத்தலைவலி என பல்முக குண ஊக்கியாய் பணிபுரிகிறது.

உலர்ந்த திராட்சைப் பழத்தைத் தேனில் ஊறவைத்துத் தினசரி பாலுடன் ஒரு ஸ்பூன் சாப்பிட்டுவர மலச்சிக்கல் விலகும். தாது விருத்தி பெறும்.

பிள்ளைவரம் தரும் நாவல்

இது நம்ம ஊர்ப் பழமாகும். இது நீரிழிவுக்கு கண்கண்ட மருந்து. கணையத்துடன் இது நேரடித் தொடர்பு கொண்டு நீரிழிவுக்கு நியாயம் கேட்கிறது. சிறுநீர்க் கற்கள் கரையவும், தொழுநோய் குணமாகவும் நாவல் பழச்சாறு உதவுகிறது. அபூர்வமான வைட்டமின் ஈ இதில் உண்டு. பிள்ளைவரம் வேண்டும் பெண்கள் சாமியார்களைச் சுற்றாமல் நாவல் பழத்தைத் தின்னலாம். மலட்டுத் தன்மையைப் போக்கி, கர்ப்ப விருத்தியை நிச்சயம் பெறலாம்.

சிறந்த மருந்தகம் எலுமிச்சை 🍋

எவரெஸ்ட் சிகரத்தை முதலில் எட்டிய வீரர்கள் இந்தச் சாற்றைப் பருகியே சாதித்ததாக கூறினர். இதன் முக்கிய சேர்க்கை சிட்ரிக் அமிலமும், வைட்டமின் சி யும் தான். இரத்த வாந்தியை இது நிறுத்தும். நுரையீரல், குடல், தொண்டை, ஜலதோஷம், காலரா, உடல் பருமன், நல்ல பசி என அனைத்துத் துறைகளிலும் இது பணியாற்றி சிறந்த மருந்தகமாய் திகழ்கிறது.

ஆரோக்கியத்திற்கு அத்தி

புரதம், கொழுப்பு, மாவுச்சத்து இதிலுண்டு. தேயும் எலும்புக்கு வேண்டிய கல்சியம் இதில் உள்ளது. பத்தே நாளில் வீரியம் தரும் சுவரொட்டிகளுக்கு மத்தியில், இப்பழம் உண்மையிலேயே ஆண்மையைத் தட்டியெழுப்புகிறது. மூலநோய்க்கும், மூளைச் சோர்வுக்கும் இது அருமருந்து.

ஆரஞ்சு 🍊
இனிப்பான மருந்து.

ஒரு நாளைக்கு 2-4 ஆரஞ்சு எடுப்பது ஜலதோஷத்தை விலக்கும். கொழுப்பைக் குறைக்க உதவும். மேலும் சிறுநீரகக் கற்களைக் கரைப்பதோடு, கற்கள் வராமலும் தடுக்கும்.
அதனுடன் பெருங்குடல் புற்றுநோயின் ஆபத்தினைக் குறைக்கிறது.

ஆரஞ்சும் இன்னொரு தாய்ப்பாலே: தாய்ப்பால் தரமுடியாத தாய்மார்கள் தங்களின் பிரதிநிதியாக குழந்தைகளுக்கு இந்தச் சாறைத் தரலாம். இப்பழம், இதயவலி, மார்புவலிக்கு மிகச் சிறந்த மருந்தாகும். இரத்தக் குழாய்களின் அடைப்பை நீக்கி, ரத்தத்தைக் கொண்டு செல்ல இது உதவுகிறது. ஒரு ஆரஞ்சுப் பழம் மூன்று கப் பாலுக்கு இணையானது. நல்ல தூக்கத்தை இது வரவழைக்கிறது. தினமும் இதைச் சாப்பிட நீண்ட ஆயுள் உறுதியாகும்.

வயிற்றைப் பேணும் மாதுளை

இது மஞ்சள் காமாலையைப் போக்கி, கல்லீரல், இதயம், சிறுநீரகம் இவைகளையும் பாதுகாக்கிறது. பித்த வாந்தி உள்ளோர் இதைத் தேனுடன் சாப்பிட உடனடி நிவாரணம் உண்டு. மலத்துடன் ரத்தம் வெளியேறுவதை இது தடுக்கிறது. அறிவுத்திறனை அதிகரிக்கும் பழமாகவும் இது முதலிடம் பெறுகிறது.

பார்வை இழப்பை தடுக்க மாம்பழம் 🥭

இது முக்கனிகளில் ஒன்று. இதிலுள்ள டார்டாரிக் அமிலமும், மாலிக் அமிலமும் நரம்புத் தளர்ச்சியின்றி உடலைக் காக்கின்றன. இது சிறந்த சிறுநீர்ப் பெருக்கியாகும். பசியைத் தூண்டக் கூடியது. தோலுடன் சாப்பிட வேண்டும். அதிக பலன் கிடைக்கும். பார்வை இழப்பைத் தடுக்கிறது. புதிய இரத்த அணுக்களை உற்பத்தி செய்கிறது ஆண்மையைப் பெருக்கி, கூ(ட)டல் செய்கிறது. இது கிடைக்கும் போது சாப்பிட்டு வைத்தால் குளிர்காலத்தில் வரும் சளி, ஜல தோஷம் இவைகளை முன்கூட்டியே கட்டுப்படுத்தலாம்.

ஆப்பிள்🍎
ஆப்பிளில் விட்டமின்-சி சத்து குறைவாக இருப்பினும்,அதில் உள்ள antioxidants ,flavonoids போன்றவை இந்த விட்டமின் - சி சத்துக்களை மேம்படுத்துவதால், பெருங்குடல் புற்று நோய்,மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்துக்களைக் குறைக்கிறது

ஸ்ட்ராபெர்ரி 🍓
பாதுகாப்பு தரும் பழம்.
இந்தப் பழத்தில் மற்ற எல்லாப் பழங்களையும் விட. மொத்த Antioxidant சக்தி இருப்பதால்,இது நம் உடலில் சுதந்திரமாய் கட்டுப்பாடற்று பல்கிப் பெருகும் அடிப்படைக் கூறுகளால் ( free radicals) இரத்த நாளங்களில் அடைப்பு, புற்று நோய்க் காரணிகள் பெருகுதல் முதலியவை ஏற்படாமல் நம்மைப் பாதுகாக்கிறது.

தர்பூசணி🍉

மிகவும் குளிர்ச்சியான ஒரு தாகம் தீர்ப்பான். 92% தண்ணீர்ச் சத்துக்களையுடையது. இந்தப் பழத்தில் மாபெரும் அளவில் Glutathione இருப்பதால்,அது நம் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது lycopene என்னும் புற்று நோயை எதிர்த்துப் போராடும் ஒரு oxidant இன் முக்கிய ஆதாரமாகவும் உள்ளது. தர்ப்பூசணியில் உள்ள மற்ற சத்துக்கள் விட்டமின் C , பொட்டாசியம் ஆகியவை.

பலாப்பழம்
பலாப்பழத்தைத் தேனுடன் கலந்து ஒன்றிரண்டு சாப்பிட்டு வர கபால நரம்புகள் வலிமை பெறும். அதிகம் சாப்பிட்டால் உடலில் சூடு உண்டாகும்.

இலந்தைப் பழம்
பகலுணவுக்குப் பின் இலந்தைப் பழம் சாப்பிட்டு வர, செரிமானம் தூண்டப்பெறும். அக்கினி மந்தம், கபக்கட்டு, பித்தம் விலகும்.

வில்வப் பழம்
பாலில் கலந்து சாப்பிட மலச்சிக்கல் விலகும். வயிற்றுப் புண் ஆறும். சிறுநீரகம் நன்கு செயல்படும்.

அரசம் பழம்
விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, தரமான அணுக்களை உருவாக்குவதில் அரசம் பழம் முதலிடம் பெறுகிறது.

கிவி பழம்🥝
இது ஒரு சிறிய ஆனால் வலிமை மிகுந்த பழம். இப்பழம் பொட்டாசியம், மக்னீஷியம், விட்டமின்- ஈ. மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த ஓர் நல்ல பழம். ஆரஞ்சுப் பழத்தை விட விட்டமின C சத்து கிவி பழத்தில் இரண்டு மடங்கு அதிகம் உள்ளது.

உணவிற்குப் பிறகு குளிர்ந்த தண்ணீர் அல்லது பானங்கள் குடிப்பது = புற்று நோய் உண்டாக்கும்.

இப்படி நம்மைச் சுற்றிலும் எண்ணற்ற வகைகளில் பழங்களுண்டு. அவை ஒவ்வொன்றிலும் ஒரு குணம் உண்டு. அவற்றைக் கண்டறிந்து ருசிக்க வேண்டியது நமது பொறுப்பு.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H